Oviya Leaked: ஓவியாவின் வீடியோ கேட்டு அலையும் கூட்டம்; உணர வேண்டியது என்ன? சோசியல் மீடியாவில் கருத்துக் கலவரம்..!
திரைத்துறையில் பணியாற்றி வரும் பெண்களுக்கு ஏற்கனவே பல இடர்பாடுகள் இருக்கும் நிலையில், ஒருசில நேரம் நடிகைகளின் பெயருக்கு களங்கத்தை விளைவிக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
அக்டோபர் 14, சென்னை (Cinema News): மலையாளத் திரைப்படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை ஓவியா (Oviya Helen), தமிழில் களவாணி, முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, யாருமிருக்க பயமேன், 90 எம்எல், முனி 4: காஞ்சனா, களவாணி 2 உட்பட பல படத்தில் நடித்திருந்தார். கடந்த 2017ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 (Bigg Boss Tamil)-ல் கலந்துகொண்டு, மக்களின் பேராதரவைப்பெற்றவருக்கு ஓவியா ஆர்மி (Oviya Army) என்ற மிகப்பெரிய வரவேற்பும், அடையாளமும் கிடைத்தது.
சமூக வலைத்தளங்களில் வைரல்:
இதனிடையே, கடந்த 2 நாட்களாக எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், ஓவியா வேறொரு நபருடன் தனிமையில் இருப்பது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது என தகவல் கசிந்தது. இதுகுறித்த ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வந்த நிலையில், சமூக விரோத கும்பலை சேர்ந்தவர்கள் வீடியோவை பகிர பல வழிகளை மேற்கொண்டு, அதனை தங்களின் இடுகைகளாக பதிவு செய்து வீடியோவை வைரலாக்கி இருந்தனர். மேலும், அவரின் கைகளில் இருந்த அடையாளத்தை குறிப்பிட்டு, நடிகையின் வீடியோ தான் என அவதூறு பரப்பிக்கொண்டு இருந்தனர்.
ஓவியாவும் நேரடி கேள்வி:
அதுவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்த ஓவியா, 2 நாட்களுக்கு முன்பு பதிவு செய்திருந்த புகைப்படத்தின் கருத்துக்களில் பலரும் சென்று நேரடியாக அதுகுறித்த விஷயத்தை தெரியப்படுத்தி இருந்தனர். சிலர் வீடியோ நீளமாக இருந்திருக்கலாம், இன்னும் எச்டி தரத்தில் கிடைத்திருக்கலாம், வீடியோ உண்மைதானே? என அவதூறு செய்யும் வகையில் கேள்விக்களை எழுப்பி இருந்தனர். இந்த விஷயத்தை பொருட்டாகக் கூட மதிக்காத ஓவியா, ஒவ்வொரு பதிலும் தனது பதிலை கொடுத்து அதிர வைத்திருந்தார். Ravindar Evicted: பிக் பாஸில் இருந்து வெளியேறினார் ரவீந்தர்; பேட் மேனுக்கு முன்பே தெரிந்த ரகசியம்.!
ஆதரவும்-எதிர்ப்பும்:
தமிழ் நடிகைகளில் துணிச்சல் கொண்ட நடிகைகளின் பட்டியலில் முக்கிய இடத்தினை தக்க வைத்துள்ள ஓவியா, தனது காட்டமான பதிலையும் வழங்கியதால் அனைவரும் அமைதியாகினர். ஓவியாவின் ஆதரவாளர்கள் தங்களின் ஆதரவை நாங்கள் தருகிறோம் என்றும், நீங்கள் கவலைப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தனர். இந்த விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, போலியான கணக்குகளுடன் வலம்வரும் நபர்கள், ஓவியாவுக்கு ஆதரவாக பேசுவோரை இழிவுபடுத்தி வருகின்றனர்.
போலி கணக்கு ஆசாமிகளால் அதிர்ச்சி:
பெண் ஒருவர் தனிப்பட்ட முறையில், அவருக்கு பிடித்த நபருடன் தனிமையில் இருக்கிறார். இதனை வீடியோ எடுத்து வைத்தது யார்? என தெரியவில்லை. அதில் உள்ளவர் நடிகையா? என்பது கூட உறுதி செய்யப்படவில்லை. நடிகையும் அதற்கு விளக்கம் அளிக்கவில்லை. வீடியோவில் இருப்பது நானா? இல்லையா? என்பது மர்மமாகவே இருக்கட்டும் என அவர் கூறிவிட்டார். இவ்வாறான சூழ்நிலையில், சமூகத்தில் உயரிய அந்தஸ்தில் இருப்போரை இழுத்து போலியான கணக்குகளை வைத்துக்கொண்டு செயல்படும் நபர்களின் செயல்கள் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.
ஓவியா முதல் நபரும் இல்லை:
திரைத்துறையை பொறுத்தவரையில் பெண்களை படுக்கைக்கு அழைப்பது என்பது தொடருகிறது என ஒருபுறம் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கிறது. மறுபுறம் தொழில்நுட்ப ரீதியாக அவர்களின் பெயர்களை கேவலப்படுத்தும்பொருட்டு சூழல் ஏற்படுத்தப்படுகிறது. நடிகைகளின் பெயரை கெடுப்பதற்கு என பிரத்தியேக கும்பல் திரையுலகில் சுற்றுவதாகவும் விபரம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியதில் ஓவியா முதல் நபரும் இல்லை, கடைசி நபராகவும் இருக்கப்போவதில்லை என்பதுதான் இங்கு வருந்தவைக்கும் விஷயமே.
எதிர்காலத்தில் கட்டுப்பாடுகள் வேண்டும்:
ஒவ்வொரு பிரச்சனைக்கு பின்னரும், அந்த பிரச்னைக்குரிய தீர்வுகள் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். சைபர் குற்றப்பிரிவு துறையில் பணியாற்றும் அதிகாரிகள், ஆபாச படங்களை பதிவிடும், அதனை பகிரும் கணக்குகளை கண்டறிந்து நீக்கி வந்தாலும், அதுகுறித்த செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்தாலும், இவர்களின் செயல்களை தடுக்க இயலாமல் திணறி வருகின்றனர். இவ்வாறான குற்றங்களுக்கு ஆரம்புள்ளிகளை கண்டறிந்து கைது செய்வதே எதிர்காலத்தில் இவ்வாறான விஷயங்கள் நடக்காமல் இருக்க உதவும்.
இதுவும் கடந்து போகும்:
குற்றங்களை செய்வோர் தங்களின் சுயஇலாபத்திற்கோ அல்லது அவர் சார்ந்த நபரின் நன்மைக்கோ செயல்படுவார் எனினும், தமிழ் ராக்கர்ஸ் போல அடித்தளமான நபர்களை கைது செய்வது மட்டுமே இவ்வாறான மோசடி கும்பலின் செயல்களை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியாவை பொறுத்தவரையில் இதுவும் கடந்து போகும் என்ற விஷயத்தில் அவர் உறுதிபட இருக்கிறார். ஏனெனில் ஓவியாவின் மீது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு இருந்த நிலையம், பின்பான நிலையும் மாறியது. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம் எனினும், இவ்வாறான விஷயத்தில் மனதைரியம், பிரச்சனையை எதிர்நோக்கும் பார்வையை பொறுத்தே அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது.
ஓவியா நெட்டிசன்கள் கேள்விக்கு பதில் அளித்த தகவல்:
வீடியோ வந்துள்ளாதாக கூறும் நபரிடம் என்ஜாய் என ரிப்லை செய்த ஓவியா:
தனிமனித ஒழுக்கமே தலைசிறந்தது!
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)