Director Arthi Kumar Dead: இயக்குநர் ஆர்த்தி குமார் மரணம்.. ரசிகர்கள் சோகம்..!
சினிமா இயக்குநர் ஆர்த்தி குமார் உடல் நலக்குறைவால் காலமானார்.
பிப்ரவரி 06, சென்னை (Chennai): நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் இயக்குநர் ஆர்த்தி குமார். இவரது இயற்பெயர் சுரேஷ் குமார். திரைத்துறைக்குள் நுழைந்த பின்பு, இவர் தனது பெயரை ஆர்த்தி குமார் என மாற்றிக் கொண்டார்.
இவர் நேற்று முன்தினம் பாளை ஹை கிரவுண்ட் மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து, மருத்துவர்கள் சிகிச்சை கொடுத்த போதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் இரவு எட்டு மணிக்கு உயிரிழந்தார். அவர் உடலில் என்ன பிரச்சினைகள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. Superstar Rajinikanth Wishes Thalapathy Vijay: அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்.. வாழ்த்து தெரிவித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..!
ஆர்த்தி குமார் இயக்குநராக நடிகர் சத்யராஜை வைத்து ’அழகேசன்’, ’சவுண்ட் பார்ட்டி’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். மேலும் பல இயக்குநர்களிடம் கதாசிரியராக பணியாற்றினார். மேலும் ஞான ராஜசேகரன் இயக்கிய ' பெரியார்' படத்தில் ராஜாஜியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது திடீர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)