பிப்ரவரி 06, சென்னை (Chennai): நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு படம் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவர் நீண்ட காலமாகவே அரசியலில் குதிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஆரம்பத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்தார்.
தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். அதுமட்டுமின்றி 10, 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார். அது போல் அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என்றார். மேலும் காசுக்காக ஓட்டு போடாதீர்கள் என்றும் காசுக்காக ஓட்டு போடக் கூடாது என உங்கள் பெற்றோருக்கு நீங்கள் அறிவுறுத்துங்கள் என்றும் விஜய் அந்த விழாவில் கேட்டுக் கொண்டார். Talking to Your Child About Periods: குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்து எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும்?. ஒவ்வொரு தாய்மார்களும் தெரிந்து கொள்ள வேண்டியவை..!
தமிழக வெற்றி கழகம்: இந்த நிலையில்தான் நடிகர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சென்றனர். அப்போதே அவர் இன்னும் ஒரு மாதத்தில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என்று பலர் கூறினர். தொடர்ந்து, நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று கட்சி தொடங்கினார்.
விஜய்க்கு ரஜினி வாழ்த்து: விஜய்யின் அரசியல் வருகைக்கு தற்போது நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். வேட்டையன் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த அவரிடம், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துகள்” என தெரிவித்தார்.