IIFA Awards 2024: ஐஃபா விருதுகள் 2024.. விருதுகளை அள்ளிய பொன்னியின் செல்வன்.. முழு வெற்றியாளர்கள் லிஸ்ட்.!

2024 ஆம் ஆண்டுக்கான ஐபா விருது அபுதாபியில் உள்ள யாஸ்தீவில் நடைபெற்று இருந்தது.

IIFA (Photo Credit: Facebook)

அக்டோபர் 22, அபுதாபி (Cinema News): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐஃபா விருது வழங்கும் விழா வருடம் வருடம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபா விருது அபுதாபியில் ஆம் யாஸ்தீவில் நடைபெற்று இருந்தது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் விக்ரம், சிரஞ்சீவி, ராணா டகுபதி, ஏ.ஆர்.ரஹ்மான், வெங்கடேஷ், மணி ரத்னம், பிரபுதேவா, சதீஷ், சமந்தா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய், ஷாஹித் கபூர், ஷபானா ஆஸ்மி, ஜாவேத் அக்தர், கரண் ஜோஹர், அனன்யா பாண்டே மற்றும் கிருத்தி சனோன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதாவது தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த கோலிவுட், டோலிவுட், மாலிவுட் மற்றும் சாண்டில் வுட் என அனைத்து திரை உலகைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பொன்னியின் செல்வன்: இந்த நிகழ்ச்சியில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறந்த பாடல்கள், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த முன்னணி கதாபாத்திரம் ஆண், சிறந்த முன்னணி கதாபாத்திரம் பெண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தமிழில் வென்றது. Brother Update: ஜெயம் ரவியின் ‘பிரதர்’.. புதிய பாடல் நாளை வெளியீடு!

வெற்றியாளர்கள் லிஸ்ட்:

சிறந்த படம் (தமிழ்): ஜெயிலர்

சிறந்த நடிகர் (தெலுங்கு): நானி (தசரா)

சிறந்த நடிகர் (தமிழ்): விக்ரம் (பொன்னியின் செல்வன்: II)

சிறந்த நடிகை (தமிழ்): ஐஸ்வர்யா ராய் (பொன்னியின் செல்வன்: II)

சிறந்த இயக்குநர் (தமிழ்): மணிரத்னம் (பொன்னியின் செல்வன்: II)

சிறந்த இசையமைப்பாளர் (தமிழ்): ஏ. ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்: II)

இந்திய சினிமாவில் மிகச்சிறந்த சாதனை: சிரஞ்சீவி

இந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பு: பிரியதர்ஷன்

இந்திய சினிமாவின் ஆண்டின் சிறந்த பெண்: சமந்தா

நெகடிவ் கேரக்டரில் சிறந்த நடிப்பு (தமிழ்): எஸ்.ஜே. சூர்யா (மார்க் ஆண்டனி)

நெகடிவ் கேரக்டரில் சிறந்த நடிப்பு (தெலுங்கு): ஷைன் டாம் சாக்கோ (தசரா)

நெகடிவ் கேரக்டரில் சிறந்த நடிப்பு (மலையாளம்): அர்ஜுன் ராதாகிருஷ்ணன் (கண்ணூர் அணி)

துணை கேரக்டரில் சிறந்த நடிப்பு (ஆண் - தமிழ்): ஜெயராம் (பொன்னியின் செல்வன்: II)

துணை கேரக்டரில் சிறந்த நடிப்பு (பெண் - தமிழ்): சஹஸ்ரா ஸ்ரீ (சித்தா)

கோல்டன் லெகசி விருது: நந்தமுரி பாலகிருஷ்ணா

கன்னட சினிமாவில் சிறந்து விளங்குபவர்: ரிஷப் ஷெட்டி

சிறந்த அறிமுகம் (பெண் - கன்னடம்): ஆராதனா ராம் (கந்தாரா)