IIFA Utsavam 2024: கோலாகலமாக துவங்கிய ஐஃபா உத்சவம்.. விசில் போடு பாட்டிற்கு குத்தாட்டம் போடும் ரெஜினா.. வீடியோ உள்ளே..!
சர்வதேசஅளவில் மிகப்பெரிய கவனத்தை பெற்றுவரும் ஐஐஎஃப்ஏ விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டும் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.
செப்டம்பர் 27, அபுதாபி (Cinema News): அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் உள்ள எத்திஹாட் அரங்கில் (UAE) இன்று ஐஃபா உத்சவம் (IIFA Utsavam 2024) கோலாகலமாக துவங்கியது. நாளை செப்டம்பர் 28ம் தேதி ஐஃபா விருதுகள் (IIFA Awards 2024) நிகழ்ச்சியும் செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை ஐஃபா ராக்ஸ் நிகழ்ச்சிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை ஐஃபா யூடியூப் சேனலில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோனி டிவி, ஸ்டார் பிளஸ், கலர்ஸ் டிவி மற்றும் ஜியோ சினிமாஸ் போன்றவற்றின் மூலம் பார்க்க முடியும்.
இந்த நிகழ்ச்சியில் பத்ம விபூஷன் விருது பெற்ற சிரஞ்சீவி, இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்படஉள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துக்கொள்ள உள்ளனர். அவர்களாவன: ராம் சரண், உலக அழகி ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மணிரத்னம், பழம்பெரும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, ஆண்டவர் கமல்ஹாசன், இசை மேதை ஏ.ஆர் ரஹ்மான், வடிவமைப்பாளர் ரெசூல் பூக்குட்டி, காந்தாரத்தின் ரிஷப் ஷெட்டி, சிவகார்த்திகேயன், சிலம்பரசன், நிவின் பாலி, ரவி வாமன், தோட்டா தாணி மற்றும் எஸ்.ஜே சூர்யா, சமந்தா ரூத் பிரபு மற்றும் பலர் கலந்துக்கொள்ள உள்ளனர். OTT And Theatrical Releases: கொட்டுக்காளி முதல் மெய்யழகன் வரை.. இந்த வாரம் வெளியாகும் படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!
ஐஃபா உத்சவத்தில் பலர் குத்தாட்டம் போட உள்ளனர். அந்த வகையில் தென்னிந்திய நடிகை ரெஜினா கசாண்ட்ரா IIFA உற்சவம் 2024 நிகழ்ச்சி பற்றி கூறியதாவது, "நான் 8 நிமிடத்திற்கு ஆடப் போகின்றேன். தளபதி விஜய் மற்றும் சிரஞ்சீவிக்கு மரியாதை செலுத்தும் வகையில், “விசில் போடு” , “ரஞ்சிதாமே” , “குவ்வா கோரிங்காதோ” , சன கஸ்டம்” மற்றும் “அம்மாடு லெட்ஸ் டு கும்முடு” போன்ற பாடல்களுக்கு ஆடப் போகின்றேன்." என்றார்.
ரெஜினா கசாண்ட்ரா IIFA உற்சவம் 2024 நிகழ்ச்சி பற்றி பேசிய வீடியோ:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)