செப்டம்பர் 27, சென்னை (Cinema News): இந்த வாரம் திரையரங்குகள், ஓடிடி மற்றும் திரையரங்குகளுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் குறித்து பார்ப்போம். திரைப்பட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு வாரமும், வித்தியாசமான கதையம்சத்துடன் கூடிய படங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை பல படங்கள் இன்று ரிலீஸ் ஆகின்றன. அவை எந்தெந்த படங்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
வாழா (Vaazha): கௌதமண்டே ரதம் என்கிற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் ஆனந்த் மேனன் இயக்கிய படம் “வாழா-பயோபிக் ஆஃப் எ பில்லியன் பாய்ஸ்”. இப்படத்தில் ஜியோமோன் ஜோதிர், சாஃப் போய், ஹஷிரீ, அனுராஜ் மற்றும் அமித் மோகன் ராஜேஸ்வரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 15 அன்று வெளியான வாழா படம், கேரளாவில் பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை பெற்று பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்டது. இந்த படம் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது.
சரிபோதா சனிவாரம் (Saripodhaa Sanivaaram): நானி, பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் பான் இந்தியா படமான 'சரிபோதா சனிவாரம்' படம் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி ரிலீஸாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளிலும் இன்று வெளியாகியிருக்கிறது. Devara: தேவாரா ரிலீஸ்; தலையை துண்டாக வெட்டி பலிகொடுத்த ரசிகர்.. பதறவைக்கும் சம்பவம்.! கொண்டாட்டத்தில் கொடுமை.!
கொட்டுக்காளி (Kottukkaali): கூழாங்கல் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.வினோத்ராஜ். தனது முதல் படத்திலேயே உலக அளவில் கவனம் ஈர்த்தார். அந்தப் படம் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்றது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு கொட்டுக்காளி (Kottukkaali) படத்தினை இயக்கி இருந்தார் இயக்குனர். படத்தில் சூரி மற்றும் அன்னா பென் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அன்னா பென் நடித்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். இப்படத்தில் ஒரு பாடல் கூட இல்லை மேலும் பின்னணி இசை இல்லை. காரணம் படத்தில் இசை அமைப்பாளர் இல்லை. இந்தப் படம் உலகத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்றது. இந்த படம் இன்று பிரைமில் வெளியாகிறது.
டிமாண்டி காலனி 2 (Demonte Colony 2): டிமாண்டி காலனி (Demonte Colony 2) இரண்டாம் பாகத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருள் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளையும், குமரேஷ் எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். இப்படம் ஜீ5-இல் இன்று வெளியானது.
ஸ்ட்ரீ 2 (Stree 2): பாலிவுட் மட்டுமன்றி, உலகளவில் பெரிய வெற்றியை பெற்ற படம் ஸ்ட்ரீ 2. ஷ்ரத்தா கபூர், ராஜ்குமார் ராவ், உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான இந்த படம் சுமார் ரூ.840 கோடி வரை கலெக்ட் செய்திருக்கிறது. இந்த படம், இந்தி மொழியில் அமேசான் ப்ரைம் தளத்தில், இன்று வெளியானது.
தாசா கபார் (Taaza Khabar): ஷ்ரியா பில்கோன்கர், மகேஷ் மஞ்ச்ரேக்கர், தேவன் போஜானி, ஷில்பா சுக்லா, பிரதமேஷ் பரப் மற்றும் நித்யா மாத்தூர் ஆகியோர் நடித்த தாசா கபார் இணைய தொடரின் இரண்டாவது சீசன் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி ஜானரில் உருவான சீரிஸ் தாசா கபார், தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு கிடைக்கும் சக்திகளும், அடுத்த சம்பவங்களை கொண்டு எடுக்கப்பட்டது. Vaazhai OTT Release: பாலாவையே அழ வைத்த 'வாழை'.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?!
நோபடி வான்டஸ் திஸ் (Nobody Wants This): ஆடம் பிராடி & கிறிஸ்டன் பெல் (Adam Brody & Kristen Bell) நடித்துள்ள சீரிஸ் `Nobody Wants This'. இதன் கதை நோவா மற்றும் ஜோன்னே இடையேயான காதலும், மோதலுமே ஆகும். இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸில் இன்று வெளியானது.
மெய்யழகன் (Meiyazhagan): கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மெய்யழகன் படத்தை இயக்குநர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2 டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார். பத்திரிகையாளர் காட்சியிலேயே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ள நிலையில், திரையரங்குகளில் மெய்யழகன் இன்று வெளியானது.
ஹிட்லர் (Hitler): இயக்குனர் தனா இயக்கத்தில் விஜய் ஆன்டனி, ரியா சுமன் & கவுதம் மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சஞ்சய் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் விவேக் - மெர்வின் இசைக்குழு இப்படத்திற்கு இசையமைத்துள்ளது. இந்த படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
பேட்டா ராப் (Petta Rap): இயக்குனர் எஸ் ஜே சினு இயக்கத்தில் பிரபு தேவா, வேதிகா, சன்னி லியோன் என பல தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்திருக்கும் டான்ஸ் கதைக்களம் கொண்ட திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
தேவரா - பார்ட் 1 (Devara - Part 1): தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், ரசிகர்களின் படைபலத்தை கொண்ட முக்கிய நடிகராகவும் வலம்வருபவர் ஜூனியர் என்டிஆர் (Junior NTR). இவரின் 30வது திரைப்படம் தேவரா (Devara). ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிக்கும் இப்படத்தில், பிரகாஷ்ராஜ், நந்தமுரி கல்யாண் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளனர். யுவசுதா ஆர்ட்ஸ்ட் & என்.டி.ஆர் ஆர்ட்ஸ்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். கோர்டாளா சிவா இயக்கியுள்ள இப்படம், உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உட்பட பல மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியானது. IIFA Utsavam 2024 in UAE: ஐஐஎஃப்ஏ விருது விழா 2024.. உலக அழகி முதல் ஆண்டவர் வரை.. கலந்துகொள்பவர்களின் முழு லிஸ்ட் இதோ.!
சட்டம் என் கையில் (Sattam En Kayil): இயக்குனர் சச்சி இயக்கத்தில் சதிஷ், வித்யா பிரதீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஸ்ரீராம் சத்தியநாராயணன், கோகுல கிருஷ்ணன் ஷண்முகம் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
தில் ராஜா (Dhil Raja): இயக்குனர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில், விஜய் சத்யா ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'தில் ராஜா'. நடிகை செரின் இந்த படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார். அதே போல் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞருக்கும் - பணக்காரருக்கு நடக்கும் போராட்டமே இந்த படம் என கூறப்படுகிறது. இந்த படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.