June 14th Tamil Releases: விஜய் முதல் விஜய் சேதுபதி வரை.. இன்று தமிழில் வெளியான படங்களின் லிஸ்ட் இதோ..!

இந்த வாரம் திரையரங்குகளில் தரமான படங்கள் சம்பவம் செய்ய காத்திருக்கிறது.

June 14th Tamil Releases (Photo Credit: @iMDB)

ஜூன் 14, சென்னை (Cinema News): கடந்த சில வாரமாகவே தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய படங்கள் ஏதும் வெளியாகாமல் தியேட்டர்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. இந்த வாரம் தியேட்டரில் ஒரு சில சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. அதனுடன் விஜய் படம் ஒன்றும் ரீ-ரிலிஸ் ஆக உள்ளது‌. அவை என்ன படங்கள் என்று இப்பதிவில் காணலாம்‌.

மகாராஜா: விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள மகாராஜா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி உடன் அபிராமி, மம்தா மோகன் தாஸ், நட்டி நட்ராஜ், அனுராக் கஷ்யப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். Dr Subbiah Murder Case: நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு.. 7 பேரின் தூக்கு தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி..!

பித்தல மாத்தி: பிரபல நடிகர் ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதி ராமையா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘பித்தல மாத்தி’. இயக்குநர் மாணிக்க வித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப்படத்தில் உமாபதி ராமையா உடன், சம்ஸ்கிருதி, பால சரவணன், வினுதா லால், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், 'ஆடுகளம்' நரேன், 'காதல்' சுகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். என். வெங்கட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோசஸ் இசையமைத்திருக்கிறார். விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படமானது இன்று வெளியானது.

அழகிய தமிழ் மகன்: நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் திரைப்படம் இன்று மறுவெளியீடு செய்யப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். படத்தில் ஹீரோவிற்கு ஏற்படும் வித்தியாசமான சக்தியால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. பணக்கார வீட்டு பெண்ணான ஸ்ரேயாவை அபகரிக்க வில்லன் விஜய் செய்யும் முயற்சிகள் அதை தடுக்க ஹீரோவின் போராட்டம் போன்றவற்றை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.