Kottukkaali Movie Review: ஆணாதிக்கத்தை பேயாக வந்தடித்த கொட்டுக்காளி.. முழுவிமர்சனம் இதோ..!

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி , அன்னா பென் நடித்துள்ள கொட்டுக்காளி படத்தின் முழு விமர்சனம் இதோ.

Kottukkaali (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 23, சென்னை (Cinema News): கூழாங்கல் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பி.எஸ்.வினோத்ராஜ். தனது முதல் படத்திலேயே உலக அளவில் கவனம் ஈர்த்தார். அந்தப் படம் ஏராளமான சர்வதேச விருதுகளை வென்றது. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இப்போது கொட்டுக்காளியுடன் (Kottukkaali) வருகிறார் வினோத்.

கொட்டுக்காளி: விடுதலை, கருடன் என அடுத்தடுத்து சூரி ஹீரோவாக நடித்த இரண்டு படங்களும் மாஸ் வெற்றியை ருசித்த நிலையில், அவரின் ஹீரோவாக நடித்த அடுத்த படமான கொட்டுக்காளி தற்போது ரிலீசாகியுள்ளது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அன்னா பென் நடித்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். இப்படத்தில் ஒரு பாடல் கூட இல்லை மேலும் பின்னணி இசை இல்லை. காரணம் படத்தில் இசை அமைப்பாளர் இல்லை. இந்தப் படம் உலகத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்றது.

கதைக்கரு: 12ம் வகுப்பு முடிந்த உடனே தனது முறைப்பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளாமல் பாண்டி (சூரி) அவரை கல்லூரிக்கு படிக்க அனுப்புகிறார். ஆனால், கல்லூரியில் காதல் வயப்பட்ட மீனா (அன்னா பென்) பாண்டியை திருமணம் செய்ய மறுக்கிறார். அவருக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி குடும்பமே சாமியார் ஒருவரிடம் அழைத்துச் செல்லும். கடைசியாக மீனாவுக்கு பிடித்த பேய் ஓட்டப்பட்டதா? இந்த சமூகத்தில் நிலவும் பேய் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதா? என்பது தான் கதை. Raayan OTT Release: ஓடிடியில் வெளியான ராயன்.. தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

ப்ளஸ்: சூரியின் அசுரத்தனமான நடிப்பு ஆகியவற்றால் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. நடிகை அன்னா பென்னுக்கு இந்தப் படம் தமிழ்த் திரையுலகில் முதல் அறிமுகமாகும். இருப்பினும் கதாநாயகி அன்னா பென் நடிப்பு சூப்பர். நம் சமூகத்தில் பெண்களின் மீதான ஒடுக்குமுறையை குறித்து இப்படம் பேசியுள்ளது. கதை மெதுவாக நகர்ந்தாலும் கதாபாத்திரங்களின் உரையாடல்களில் சுவாரஸ்யத்தையும் நகைச்சுவையும் இயல்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். படம் முழுக்க இசை இல்லை என நமக்கு எண்ணமே எழவில்லை.

மைனஸ்: கலை படைப்புகளை காண்பவர்களுக்கான படமாக இயக்குநர் வினோத்ராஜ் எடுத்துள்ள இந்த கொட்டுக்காளி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வெகுஜன ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து நிறைவுடன் வெளியேறுவார்களா? என்றால் நிச்சயம் இல்லை.

மொத்தத்தில் அனைவரும் பேச வேண்டிய கதையை, இயல்பாகவும் அழுத்தமாகவும் இயக்குனர் வினோத்ராஜ் கொடுத்திருக்கிறார்.