Temples For Actresses: குஷ்பு, நமீ, நயன் வரிசையில் இடம்பெற்ற நடிகை சமந்தா: கோவில் கட்டிய ரசிகர்..!

நடிகர்களுக்கு கோவில் கட்டும் கலாச்சாரம் தமிழ்நாட்டிலிருந்தே வந்தது.

Nayanthara | Hanshika | Nidhi Agarwal (Photo Credit: Instagram)

அக்டோபர் 16, சென்னை (Cinema News): இந்தியர்களையும் அவர்களின் சினிமா மோகத்தையும் பிரிக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அதிலும் தமிழ் திரைத்துறையில் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களை வீட்டில் ஒருவராக வைத்து பார்ப்பார்கள். தீவிர ஃபேன்கள், அவரவருக்கு பிடித்த நடிகர்கள் படம் வெளியாகும் நாளை பாலபிஷேகம், தப்பாட்டம் வைத்து திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். அதிலும் சிலர், ஒரு படி மேலே சென்று பிடித்த நடிகர்களுக்கு கோவில் கட்டுவர். சமீபத்தில் ஆந்திராவில் தெனாலி சந்தீப் என்னும் ரசிகர் சமந்தாவிற்கு தனது இல்லத்திற்கு அருகில் கோவில் கட்டியிருப்பது சமூகவலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

குஷ்பு: நடிகர்களுக்கு கோவில் கட்டும் கலாச்சாரம் தமிழ்நாட்டிலிருந்தே வந்தது. முதன் முதலில் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு தான் கோவில் தமிழகத்தில் கட்டப்பட்டது. ஆனால் நடிகர்களை விடவே நடிகைகளுக்கு தமிழகத்தில் கோவில் கட்டியிருக்கின்றனர். தமிழகத்தில் நடிகைக்கென்று முதன்முதலில் கோவில் கட்டப்பட்டது அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த குஷ்புவே. ரசிகர்கள், குஷ்புவின் மேலுள்ள அன்பினால் திருச்சியில் கோவில் கட்டினர். இந்த கோவில் 2006ம் ஆண்டு இடிக்கப்பட்டது.

நமீதா: 20களின் ஆரம்பத்தில் அதிக இளம் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நமீதாவிற்கு திருநெல்வேலியில் 2008ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டது. Bigg Boss Tamil Season 8: குரலை உயர்த்திய அர்னவ்.. "இது எங்களோட வீடு" - கதறியழுத ஜாக்குலின்.. பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு.!

நயன்தாரா: 2014ம் ஆண்டு நயன்தாராவிற்கு 500 அடியில் கோவில் கட்டுவது என அவரது ரசிகர்களால் முடிவு செய்யப்பட்டது. நயன்தாரா மறுத்ததையடுத்து சிறிய அளவில் கட்டப்பட்டது.

ஹன்சிகா மோத்வானி: ஹன்சிகா மோத்வானிக்கு மதுரை கோவில் கட்டப் போவதாக ரசிகர்கள் தெரிவித்ததையடுத்து இவரும் இதை ஏற்ற மறுத்துள்ளார். இதனால் இவருக்கு இட மாற்றம் செய்யப்பட்டு சென்னையில் கோவில் கட்டப்பட்டது.

பூஜா: இந்திய இலங்கை நடிகையான நான் கடவுளின் நாயகி பூஜா உமாசங்கருக்கு இலங்கை கொலம்போவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் சில நடிகைகளுக்கும் வெளிநாடுகளில் கோவில் கட்டப்பட்டிருக்கிறது.

நிதி அகர்வால்: தமிழில் குறைவான படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் நடிகை நிதி அகர்வாலுக்கு சென்னையில் கோவில் கட்டி 150 லிட்டர் பாலில் அபிஷேகம் செய்தது சற்று ஆச்சரியாமாகத்தான் இருக்கிறது.

தமிழக மக்களுக்கு சினிமாவும், அரசியலும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும் சினிமா, அனைத்தையும் பின்னுக்குத் தள்ளும் அளவில் மோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொழுது போக்கிற்காக பார்க்க வேண்டிய சினிமாவை அதீத அள்வில் பின்பற்றுவது தனிப்பட்ட வாழ்க்கைக்கு என்றும் ஆபத்து தான். என்ன தான் தனக்கு பிடித்த நடிகர் நடிகைகளாக இருந்தாலும் கோவில் கட்டும் அளவிற்கு செல்வதெல்லாம் சற்று அதிகம் தான்.