Pawan Kalyan: சூடுபிடிக்கும் திருப்பதி விவகாரம்! மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திக்.. பதிலளித்த பவன் கல்யாண்..!
திருப்பதி லட்டு விவகாரத்தில் தன்னிடம் மன்னிப்புக் கோரிய நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார்.
செப்டம்பர் 25, திருப்பதி (Andhra Pradesh News): ஆந்திராவில் உள்ள திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் புனித பிரசாதமான லட்டுகளுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுவாமியின் லட்டுகளுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கிடையே, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு லட்டு விற்கப்படுவது நடந்து வருகிறது. இந்நிலையில், முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பேரில் நடந்த ஆய்விலும் நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு மீது மிகப்பெரிய அளவில் அதிருப்தி எழுந்தது. Ajith Motor Racing: மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் தல அஜித்.. நரேன் கார்த்திகேயன் அறிவிப்பு..!
நடிகர் கார்த்திக்: இதையடுத்து நேற்று முன்தினம் நடிகர் கார்த்திக் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்போது திருப்பதி கோவில் லட்டு சர்ச்சை பற்றி அவரிடம் கேள்வி பெண் தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அப்போது நடிகர் கார்த்தி, ‛‛நாம் இப்போது லட்டு பற்றி எதுவும் பேச வேண்டாம். இது சென்சிட்டிவ்வான டாபிக். இதனை பேச விரும்பவில்லை. லட்டு இப்போது வேண்டாம்.'' எனக்கூறி சிரித்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது.
பவன் கல்யாண் ஆவேசம்: இதனையடுத்து, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சினிமா நிகழ்வில் லட்டுவைக் கிண்டலடிப்பீர்களா? லட்டு உணர்ச்சிமிக்க விஷயமாம். ஒருபோதும் அப்படி சொல்லாதீர்கள். நடிகர்களாக மரியாதை கொடுக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை நூறுமுறை யோசித்து பேச வேண்டும்” என தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்திக்: தொடர்ந்து நடிகர் கார்த்திக் தனது எக்ஸ் பதிவில், "அன்புள்ள பவன்கல்யாண் அவர்களுக்கு.. ஆழ்ந்த மரியாதையோடு, எதிர்பாராத தவறான புரிதலுக்கு நான் மன்னிப்பு கோருகிறேன். வெங்கடேசப் பெருமானின் ஆளுமையான பக்தன் என்ற முறையில், நமது மரபுகளை அன்புடன் நடத்துகிறேன். வாழ்த்துக்கள்" என தெரிவித்து இருந்தார். Laddu Parithapangal: கோபி-சுதாகரின் லட்டு பரிதாபங்கள் வீடியோவால் சர்ச்சை? டெலிட் செய்யப்பட்ட பதிவு; வைரலாக்கும் நெட்டிசன்கள்.!
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து, மன்னிப்பு கேட்டு நடிகர் கார்த்திக்கின் எக்ஸ் வலைப்பதிவு:
பவன் கல்யாண் பதில்: இதற்கு பதிலளிக்கும் விதமாக பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்புள்ள கார்த்தி, உங்கள் விரைவான பதில் மற்றும் நமது பொதுவான பாரம்பரியங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதையை நான் மனதார பாராட்டுகிறேன். திருப்பதி போன்ற நமது புனித தலங்கள் மற்றும் அதன் புனிதமான லட்டு ஆகியவை கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை தொடர்புடையவை. இது போன்ற விவகாரங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டியது அவசியம். எந்தவித உள்நோக்கங்களும் இன்றி நான் இதை உங்களுடைய கவனத்துக்கு கொண்டுவர விரும்பினேன்.
அதே போல அந்த சூழல் தற்செயலானதுதான் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். பிரபலங்களாக நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளை ஒற்றுமை மற்றும் மரியாதையுடன் நாம் அணுக வேண்டும். சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில் இந்த மரபுகளை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம். அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் தொடர்ந்து நம் சினிமாவை வளப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன். ’மெய்யழகன்’ படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பதிலளித்த எக்ஸ் வலைப்பதிவு: