Ajith Motor Racing (Photo Credit: Instagram)

செப்டம்பர் 25, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் (Ajith Kumar), மகிழ் திருமேனி (Magizh Thirumeni) இயக்கத்தில் விடாமுயற்சி (Vidaa Muyarchi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

குட் பேட் அக்லி: இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஹைதராபாத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் செகண்ட் லுக்கை படக்குழு வெளியிட்டது. மேலும், இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Laddu Parithapangal: கோபி-சுதாகரின் லட்டு பரிதாபங்கள் வீடியோவால் சர்ச்சை? டெலிட் செய்யப்பட்ட பதிவு; வைரலாக்கும் நெட்டிசன்கள்.!

மோட்டார் ரேசில் களமிறங்கும் அஜித்: அஜித்தை பொறுத்தவரை, நடிப்பு மட்டுமின்றி பைக் ரேசிங், கார் ரேசிங், டிரோன்கள் தயாரிப்பு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி ஆகிய விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில் தான் நடிகர் அஜித் குமார் மீண்டும் மோட்டார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. 2025ம் ஆண்டு நடைபெற உள்ள European GT4 Championship பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித் திட்டமிட்டுள்ளார். இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா & மத்திய கிழக்கு நாடு அணிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் அஜித் மோட்டார் ரேஸிங் போட்டியில் பங்கேற்க திட்டமிட்டிருப்பதாக அவரது நண்பரும், பிரபல கார் ரேஸ் வீரருமான நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வரும் 2025-ம் ஆண்டு என்னுடைய மெகாஸ்டார் நண்பர் அஜித்குமார், மோட்டார் ஸ்போர்ட்ஸின் ஜிடி ரேஸிங் பிரிவில் கம்பேக் கொடுக்க கடுமையாக உழைத்து வருவதை தெரிந்து கொண்டேன். அஜித் தனித்துவமிக்கவர். அஜித்தின் திறமைக்கு எல்லையே இல்லை. அவர் சிறந்த மனிதநேயர். ஆல் தி பெஸ்ட் தல. கார் பந்தயத்தில் நான் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தால் அது எனக்கு பாக்கியமாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

நரேன் கார்த்திகேயன் பதிவு: