Samantha Ruth Prabhu: "எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம்.. அதில் அரசியல் சதி இல்லை" அமைச்சரிடம் கோபத்தைக் கக்கிய நடிகை சமந்தா..!
நாக சைதன்யா உடனான விவாகரத்தில் எந்த அரசியல் சதியும் இல்லை என தெலங்கானா அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு நடிகை சமந்தா பதிலளித்துள்ளார்.
அக்டோபர் 03, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து, தெலுங்கு திரையுலகில் நடிக்கச்சென்று பின்னாளில் பிரபல முன்னணி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை (Naga Chaitanya) திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்கியவர் நடிகை சமந்தா (Samantha). திருமணம் முடிந்த 3 ஆண்டுகளுக்கு பின், தம்பதிகள் தங்களுக்கு இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ல் பிரிவதாகவும் அறிவித்தனர். பின்னர், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.
அமைச்சர் கருத்து: இந்நிலையில், நாக சைதன்யா, சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்தார். தெலங்கானவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் கொண்டா சுரேகா இது தொடர்பாக பேசியதாவது, “கே.டி.ஆரின் அராஜகத்தால்தான் பல நடிகைகள் விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். சினிமாவை விட்டும் விலகுகிறார்கள். கேடிஆர் பல பார்டிகளை நடத்துகிறார். அதில் நடிகைகளை தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார். அவரால்தான் சமந்தாவுக்கு விவாகரத்து நடந்தது. இது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்” இவ்வாறு தெரிவித்தார். Vettaiyan Trailer: காக்கி சட்டையில் பட்டைய கிளப்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!
சமந்தா பதிலடி: இந்நிலையில் நடிகை சமந்தா காட்டமாக இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஒரு பெண்ணாக இருந்து, பல இடர்களிலில் இருந்து வெளியேறி வந்து வேலை செய்யவும், பல நேரங்களில் பெண்ணை ஒரு பொருளாக மட்டுமே பார்க்கும் துறையில் சர்வைவ் செய்யவும், காதலில் விழுந்து, பின் அதிலிருந்து மீண்டு வரவும், ஒவ்வொரு முறை விழும்போதும் எழுந்து நின்று சண்டைபோடவும், அளவு கடந்த தைரியமும் நம்பிக்கையும் ஒருவருக்கு வேண்டும்.
ஆகவே கொண்டா சுரேகா அவர்களே... என்னுடைய இந்த பயணம் என்னை எப்படி மாற்றியுள்ளது என்பதில் நான் எப்போதும் மிகவும் பெருமை கொள்வேன். தயவுசெய்து என்னுடைய பயணத்தை நீங்கள் சிறுமைப்படுத்தாதீர்கள். ஒரு அமைச்சராக உள்ள உங்களின் வார்த்தை எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். தனிநபர்களின் தனியுரிமையை மதித்து, பொறுப்புடனும் மரியாதையுடனும் இருக்க உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
எனது விவாகரத்து தனிப்பட்ட விஷயம், அதைப் பற்றி பேசுவதை தவிர்க்குமாறு ஊகங்களையும் கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்டதாக நாங்கள் ஒரு விஷயத்தை வைத்திருப்பது என்பது, தவறான விளக்கத்தை யார் வேண்டுமானாலும் தரலாம் என்றாகாது. நான் தெளிவுப்படுத்த நினைக்கும் இன்னொரு விஷயம், எனது விவாகரத்து பரஸ்பர சம்மதத்துடன் நடந்தது. அதில் எந்த அரசியல் சதியும் இல்லை. தயவு செய்து எனது பெயரை அரசியல் சண்டைகளில் இருந்து விலக்கி வையுங்கள். நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள், இனியும் அப்படி இருக்கவே விரும்புகிறேன்” என்றுள்ளார்.