Rajinikanth awarded UAE’s Golden Visa: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கோல்டன் விசா.. ஐக்கிய அரபு அமீரகத்தின் கௌரவம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

மே 24, சென்னை (Cinema News): ரஜினிகாந்த் (Rajinikanth) தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. கண்டிப்பாக சோஷியல் மெசேஜுடன் படம் உருவாகும் என்று ரஜினியின் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை முடித்துவிட்டு ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்க உள்ளார். Mahindra XUV700 AX5 Select Variants Launched: புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஏ.எக்ஸ்5 கார்.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?.!

‍இந்த நிலையில், அபுதாபி அரசின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அமீரகத்தில் 10 ஆண்டு வசிப்பதற்கான கோல்டன் விசா நடிகர் ரஜினிகாந்த்க்கு வழங்கப்பட்டது. கோல்டன் விசாவை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், “அபுதாபி அரசிடம் இருந்து மதிப்புமிக்க அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன். இதனை வழங்கிய அபுதாபி அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மேலும் இந்த விசாவை எளிதாக கிடைப்பதற்கு ஆதரவளித்த லூலூ குழுமத்தின் தலைவரும் எனது நல்ல நண்பருமான எம்.ஏ. யூசுப் அலிக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.