Thalaivar 173 Update (Photo Credit: @ikamalhaasan X)

நவம்பர் 06, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். கூலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தை போலவே, 2ம் பாகமும் அதிரடியாக படமாக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பொங்கலுக்கு ரஜினி படம் வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நடிகர் கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் தங்களின் திரை வாழ்க்கை பயணத்தின் தொடக்கத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். அதன்பின் இதுவரை ஒன்றாக சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு என்பது கிடைக்கவில்லை. GP Muthu: நடிகர் ஜிபி முத்து மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.. நடந்தது என்ன? 

கமலுடன் கைகோர்த்த ரஜினிகாந்த் (Rajinikanth With Kamal Haasan):

இருவரும் வெவ்வேறு பாதைகளில் நடித்த நிலையில் சூப்பர்ஸ்டார், உலக நாயகன் என தனித்தனி பட்டங்களும் கிடைத்தன. நல்ல நண்பர்களாகவும் இருக்கின்றனர். இதனிடையே, இருவரும் தற்போது படம் ஒன்றில் இணைந்துள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கமல் ஹாசனின் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கி வழங்குகிறார். இந்த தகவலை கமல் ஹாசன் தனது சமூக வலைப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார். படம் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாக்குவதால் வடிவேலு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள காரணத்தால், படம் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்படுகிறது. முதற்கட்டமாக படத்துக்கு தலைவர் 173 என பெயரிடப்பட்டுள்ளது.

தலைவர் 173 படம் தொடர்பாக கமல் ஹாசன் சமூக வலைப்பதிவு (Kamal Haasan on Thalaivar 173 Movie):