H1B Visa Fees Hiked by US President Donald Trump (Photo Credit : @DynamiteNews_ / @AsianetNewsBN X)

செப்டம்பர் 21, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவுக்கு கல்வி, வேலை உட்பட பல்வேறு விஷயங்களுக்கு செல்வோருக்கு பிரத்தியேக விசா வழங்கப்படுகிறது. இதில் ஐடி நிறுவனம் உட்பட பல்வேறு வேலைகளுக்கு அமெரிக்க அரசின் சார்பில் எச்1பி விசா (H1B Visa) வழங்கப்படுகிறது. இந்த விசா திட்டத்தின் கீழ் அமெரிக்கா நிறுவனங்கள் திறமை வாய்ந்த ஒரு வெளிநாட்டைச் சேர்ந்த நபரை முதலில் 3 ஆண்டுகளுக்கும், பின் கூடுதலாக 3 ஆண்டுகளுக்கும் வேலைக்கு எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்கள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதற்காக எச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை இந்தியர்கள், சீனர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

எச்1பி விசா கட்டணம் உயர்வு (H1B Visa Fees):

நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எச்1பி விசா கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலராக உயர்த்தி உத்தரவிட்டார். இந்த நடைமுறை இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவுக்கு புதிதாக எச்1பி விசாவுக்காக விண்ணப்பிப்பவர்கள் ரூ.88 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வரும் ஒரு மாதம் வரை வேறெந்த நிறுவனத்துக்கும் பணி மாறுதல் உட்பட பிற நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. H1B Visa Fees: எச்1பி விசா கட்டணம் உயர்வு.. இந்தியர்களுக்கு பேரிடி! டிரம்ப் அதிரடி! முழு விபரம் இதோ.! 

H1B விசா கட்டணம் உயர்வு குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் :

இந்நிலையில், எச்1பி விசாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் தங்களது வெளிநாட்டு பணியாளர்களை சொந்த ஊர்களுக்கு தற்காலிகமாக செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு சென்றவர்களை உடனடியாக பணியிடத்திற்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், H1B விசா தொடர்பாக விளக்கம் (Visa Renewal Rules) அளித்த வெள்ளை மாளிகை, "ஆண்டுக்கு ஒரு முறை எச்1பி விசாவுக்காக ரூ.88 லட்சம் கட்டணம் செலுத்த தேவையில்லை. புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும். ஏற்கனவே அந்த விசாவை வைத்திருப்பவர்கள், விசாவை புதுப்பித்தவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.