Tamil Actor Bijili Ramesh Passes Away: குடியால் அழிந்துபோன பிஜிலி ரமேஷின் வாழ்க்கை.. மரணத்திற்கு முன் அவரே கூறிய உண்மை.. கலங்கவைக்கும் சோகம்.!

27) காலமானார்.

Bijili Ramesh (Photo Credit: @RameshBala X)

ஆகஸ்ட் 27, சென்னை (Cinema News): யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ் (Tamil Actor Bijili Ramesh). ரஜினி தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது. பின் படங்களிலும் தொடர்ந்து நடிக்க துவங்கினார். எல்.கே.ஜி, நட்பே துணை, ஜெயம் ரவியின் கோமாளி என பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வந்தார். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கவனம் பெற்றுவந்தார்.

பிஜிலி ரமேஷ் மறைவு: இப்படிப்பட்ட பிஜிலி ரமேஷ்க்கு குடிப்பழக்கத்தால் உடல் முழுவதும் வீங்கி, வயிற்றில் இருந்து திரவம் கசிந்து உடல்நிலை மோசமாகி இன்று அதிகாலை மரணமடைந்துவிட்டார் (Bijili Ramesh Passes Away). இவரது இறுதிசடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள இல்லத்தில் நடைபெறுகிறது. இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பிஜிலி ரமேஷின் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. Bijili Ramesh: தீவிர ரஜினி ரசிகர், நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்..! சோகத்தில் ரசிகர்கள்.!

குடிப்பழக்கம்: அதில், "எனது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. வண்டி ஓடும் வரை ஓடும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். இந்தக் குதிரை எப்போது நிற்கும் என தெரியாது. ஓடினால் ஓடினது தான். நின்றால் நின்றது தான். இனிமேல் அதைப்பற்றி பேசி எந்த பிரயோஜனமும் கிடையாது இருக்கும் வரை எனது மனைவியும் குழந்தைகளும் சந்தோஷமாக இருந்தால் சரி தான். காலையில் கூட கொஞ்சமாக தான் சாப்பிட முடிந்தது. குடிக்கிறவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவுக்கு எனக்கு யோக்கியதை கிடையாது. அந்தத் தகுதியை நான் இழந்து விட்டேன்.

முன்னாடிலாம் ஒரு இடத்தில் நிற்க மாட்டேன், சும்மா சுத்திக்கிட்டே இருப்பேன். கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் நான் செய்த தவறுகள் அதிகம், அதிகம் குடித்ததன் விளைவாக தற்போது உடல் நலம் முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறேன். என்னைப் பார்த்தாவது அந்த மோசமான குடிப்பழக்கத்தை மற்றவர்கள் விட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நான் நல்லா இருந்த போது சினிமாவில் நடித்த போது என்னை சுற்றி தினமும் 40 நண்பர்கள் கூட இருந்தனர். ஆனால், இன்றைக்கு உடல் நலம் முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும்போது ஒருவன் கூட எட்டிப் பார்க்கவில்லை. உடம்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. அதைத் தேவையில்லாத தீய பழக்கங்களுக்கு அடிமையாகி கெடுத்துக் கொள்ளாதீர்கள்" என சமீபத்தில் அவர் அளித்த பேட்டியை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.