Viral Video: அடியாள்களை வைத்து மிரட்டல்; இசையமைப்பாளர் தேவா மகள் மீது குற்றச்சாட்டு.. கதறி அழும் பெண்ணின் வீடியோவால் பகீர்!
இசையமைப்பாளர் தேவாவின் மகள் அடியாட்களுடன் வந்து தன்னை மிரட்டுவதாக கூறி அவரது வீட்டில் குடியிருக்கும் பெண் கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 23, சென்னை (Cinema News): வடபழனியில் இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயபிரதாவுக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை தீபிகா மற்றும் ஜெயக்குமாருக்கு வாடகை விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வாடகைக்கு குடியிருந்துவரும், தீபிகா திடீரென கதறிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தீபிகா கதறி அழுதபடி பகிர்ந்திருக்கும் வீடியோவில், "எனக்கும் எனது கணவரின் உயிருக்கும் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு காரணம் ஜெயபிரதா தான். வீட்டில் கத்தியுடன் புகுந்த 7 நபர்கள் தன்னை மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களை அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அவர்கள் தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்" என கூறியுள்ளார். இது சம்பந்தமாக தீபிகா காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெர்வித்த நிலையில் சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். Amaran Trailer: "அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே" அமரன் டிரைலர் நாளை வெளியீடு.!
ஜெயப்பிரதாவின் வீட்டிற்கு தீபிகா, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக வாடகைக்கு வந்ததாகவும், கடந்த ஒராண்டு காலமாக வாடகையை தராமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயப்பிரதா, வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் தனது குற்றச்சாட்டு தொடர்பாக தீபிகா எழுத்துபூரவமாக புகார் அளிக்காத நிலையில், காவல் துறையினர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.