Desingu Raja 2: விமல் நடிக்கும் தேசிங்கு ராஜா 2 படப்பிடிப்பு நிறைவு.. இணையத்தைக் கலக்கும் புகைப்படம்..!

இயக்குனர் எழில் இயக்கத்தில், விமல் நடிக்கும் "தேசிங்கு ராஜா-2" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Desingu Raja (Photo Credit: Facebook)

செப்டம்பர் 11, சென்னை (Cinema News): அஜித் நடித்த ராஜா, விஜயின் துள்ளாத மனமும் துள்ளும், தீபாவளி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எழில். கடந்த 2013-ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்த தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். காமெடி திரைப்படமாக உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்கள் ஓடியது. இதையடுத்து, 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘தேசிங்கு ராஜா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. Malaika Arora Father Dies: ஹிந்தி நடிகை மலைக்கா அரோராவின் தந்தை தற்கொலை; கண்ணீர் சோகத்தில் குடும்பம்.!

தேசிங்கு ராஜா 2: முதல் பாகத்தில் நடித்த விமல் இதிலும் ஹீரோவாக நடிக்கிறார். தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இந்நிலையில் தேசிங்குராஜா -2′ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெடிச் சிரிப்பிற்கு உத்தரவாதம் தரும் ஒரு நகைச்சுவை காட்சியில் சாம்ஸ், புகழ், மதுரை முத்து, வையாபுரி ஆகியோர் இணைந்து நடிக்கும் போது எடுத்தப் படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif