‘Titanic’ Door That Saved Rose Sells for 6 Crores: மொத்த ஹாலிவுட்டையும் திரும்பிப்பார்க்க வைத்த சம்பவம்.. ஒரு பெரிய விபத்தில் இருந்து உயிரை காப்பாற்றிய கதவுக்கு இவ்வளவு விலையா?.!
மார்ச் 27, கலிபோர்னியா (Cinema News): உலகின் ஆடம்பரமான டைட்டானிக் (Titanic) மூழ்கி நீண்ட நாட்களாகிவிட்டது. ஆனால் அது தொடர்பான கதைகள் இன்னும் மக்களின் இதயங்களிலும் மனதிலும் பசுமையாக உள்ளன. மேலும் டைட்டானிக் கப்பலை அதன் பெயரிலான, ஹாலிவுட் திரைப்படம் மூலம் அறிவோம். லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் (Kate Winslet and Leonardo DiCaprio) நடிப்பில் ஜேம்ஸ் கேமரூனின் (James Cameron) ஆஸ்கர் விருது பெற்ற டைட்டானிக்(1997) திரைப்படம், அந்த கப்பல் குறித்தான பிரமிப்புகளை இன்னமும் உயிரோடு வைத்திருக்கிறது. Baltimore Bridge Collapse: தெரியாமல் பாலத்தின் மேல் கப்பல் விட்ட கேப்டன்.. இடித்த இடியில் நொறுங்கிய பாலம்..!
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு மரக்கதவை பிடித்தபடி, நாயகன் டிகாப்ரியோவும் நாயகி கேட் வின்ஸ்லெட்டும் மிதந்தவாறு இருப்பார்கள். இந்த மரக்கதவு சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இதை ரூ.6 கோடிக்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். அதோடு, 1980-ல் வெளியான 'தி ஷைனிங்' படத்தில் இடம்பெற்ற ஜாக் நிக்கல்சன் பயன்படுத்திய கோடாரி (Jack Nicholson’s axe from The Shining), 1984-ல் வெளியான 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆஃப் டூம்' (Indiana Jones’s bullwhip from The Temple of Doom) படத்தில் பயன்படுத்தப்பட்ட சாட்டை உள்ளிட்ட பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன. இதில் டைட்டானிக் மரக்கதவு மட்டும் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.