மார்ச் 27, மேரிலேண்ட் (World News): அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் (Baltimore) பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் (Francis Scott Key Bridge) என்ற பெயரிலான மிக பெரிய பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதன் வழியே, சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பாலத்தின் மீது வாகன போக்குவரத்தும் நடந்து வருகிறது. Bus Conductor Assaults Woman: மொபைல் ஆதார் காட்டியதால் முகத்திலேயே அடித்த நடத்துனர்.. கர்நாடகாவில் நடந்த கொடூரம்..!
இந்நிலையில், சிங்கப்பூர் கொடியுடன் கூடிய டாலி என்ற பெயரிலான பெரிய சரக்கு கப்பல் ஒன்று பால்டிமோர் வழியே, இலங்கையின் கொழும்பு நகருக்கு சென்று கொண்டிருந்தது. அந்த கப்பல் நேற்று அதிகாலை திடீரென பாலத்தின் மீது மோதி விபத்து (Bridge Collapse) ஏற்பட்டது. இதனை கடலோர காவல் படையை சேர்ந்த மேத்யூ வெஸ்ட் என்பவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
BREAKING: Ship collides with Francis Scott Key Bridge in Baltimore, causing it to collapse pic.twitter.com/OcOrSjOCRn
— BNO News (@BNONews) March 26, 2024