Vettaiyan Review: தெறிக்க விட்ட கோலிவுட் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள்.. வேட்டையன் முழுவிமர்சனம் இதோ.!
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'வேட்டையன்' இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அக்டோபர் 10, சென்னை (Cinema News): சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நடித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வேட்டையன் (Vettaiyan) படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மலையாள திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டார் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வருகின்றனர். இவர்களுடன் அமிதாப் பச்சன் (Amitabh Bachchan), ராணா டகுபதி, பகத் ஃபாசில், ஷர்வானந்த், ரமேஷ் திலக், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. இதையொட்டி தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் ஆடிப்பாடி, பட்டாசு வெடித்தும் தியேட்டர் முன் கொண்டாடி மகிழ்ந்தனர். முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், இப்படம் எப்படியிருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம்.
கதை: கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்மை தவறாத காவல் அதிகாரி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கிறார் அதியன். கொலை குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் கொலை செய்து பெயர் பெறுகிறார். இவரது நேர்மையை பார்த்த அரசு பள்ளி ஆசிரியை சரண்யா (துஷாரா விஜயன்) தான் பணி புரியும் பள்ளியில் கஞ்சா பதுக்குவது குறித்து அவருக்கு தெரியப்படுத்துகிறார். இதனால் இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவாகிறது. இந்நிலையில் சரண்யா, தான் பணிபுரியும் பள்ளியிலேயே கற்பழிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார்? கொலையாளியை ரஜினி கண்டுபிடித்தாரா? போன்ற பல கேள்விகளுக்கு விடையாககிறது மீதி கதை. Thalapathy Vijay Watches Vettaiyan: சூப்பர் ஸ்டாரின் 'வேட்டையன்' பார்க்க வந்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.!
பிளஸ்: என்கவுன்ட்டர் சரியான தீர்வு அல்ல என்பதை உணர்த்தும் பவர்ஃபுல்லான ஜட்ஜ் ரோலில் அமிதாப் பச்சனும் குற்றவாளிகளை தண்டித்து குற்றங்களை குறைக்கும் காவல் அதிகாரியாக ரஜினிகாந்தின் நடிப்பும் பக்காவாக உள்ளது. ரஜினிகாந்தை யங்காகவும் எனர்ஜியாகவும் இயக்குநர் காட்டியிருப்பது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்ஸ் தான். பகத் ஒரு திருடனாக இருந்தாலும் ரஜினிகாக அவர் உதவும் இடம், அதோடு ரித்திகாவிடம் அவர் அடிக்கும் கவுண்டர் கலகலப்பாக உள்ளது. படத்தில் அனிருத்தின் பி.ஜி.எம். பெரிய பலம். ஆனால் நான்கு பாடல்களில் மனசிலாயோ மற்றும் ஹன்ட்டர் வந்தார் பாடல்கள் மட்டுமே மனசில் நிற்கிறது.
மைனஸ்: படத்தில் வீணடிக்கப்பட்டது மஞ்சு வாரியர்தான். படத்தில் அவருக்கு பெரிதாக வேலையே இல்லை. கல்வியை வைத்து காசு பார்க்கும் தொழில் அதிபரான ராணா படத்தின் இறுதியில் வருகிறார். காட்சிகளும் வலுவாக எழுதப்படவில்லை. திரைக்கதையில் முதல் 30 நிமிடங்களில் இருந்த வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவது படத்திற்கு நெகடிவாக அமைந்திருக்கிறது. படம் ஓகே ரகமாக இருந்தாலும் ரஜினி ரசிகர்கள் மட்டுமன்றி நல்ல படத்தை பார்க்க விரும்புபவர்களும் வேட்டையன் படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.