Bakasuran Movie Sneak Peek: பகாசூரன் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு - செல்வராகவனின் அசத்தல் நடிப்பு..!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் அடுத்தபடியாக உருவாகியுள்ள பகாசூரன் திரைப்படத்தின் 2 நிமிட வீடியோ காட்சிகள் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தவுள்ள காட்சிகளாக இது அமைந்திருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Bakasuran Visuals from Sneak Peek (Photo Credit: YouTube)

பிப்ரவரி 14: தமிழில் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் (Pazhaya Vannarapettai, Draupathi, Rudra Thandavam) ஆகிய திரைப்படங்களை இயக்கி வழங்கிய இயக்குனர் மோகன் ஜி (Mohan.G), தற்போது இயக்குனராக கடந்த காலங்களில் கோலோச்சி காணப்பட்ட செல்வராகவனை (Director Selvaraghavan Act as Hero) நாயகனாக வைத்து பகாசூரன் (Bakasuran 2023 Movie Tamil) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் செல்வராகவன், நடராஜ் (Natraj), ராதா ரவி (Radha Ravi), கூல் சுரேஷ் (Cool Suresh), கே. ராஜன் (Director K. Rajan), மன்சூர் அலிகான் (Mansoor Ali Khan), சரவண சுப்பையா, பாண்டி ரவி, தேவதர்ஷினி உட்பட பலரும் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான் ஒரு பாடலில் நடனம் ஆடியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தவிர்த்து சில யூடியூப் பிரபலங்களும் (YouTube Celebrities) நடித்துள்ளனர்.

Bakasuran Visual from Trailer (Photo Credit: YouTube)

பகாசூரன் (Bakasuran Release Date) திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி (Feb 17) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் காட்சிகள் (Bakasuran Trailer) கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அந்த டிரைலர் காட்சிகளில் முற்போக்கு இயக்கங்களின் சில கொள்கைகள் நேரடியாக விமர்சிக்கப்பட்டது போன்ற காட்சியும் இருந்தது.

Bakasuran Trailer is Here  https://youtu.be/JYb0B-kE6ps

படம் தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி (Director Mohan. G) பல யூடியூப் மற்றும் தொலைக்காட்சி நிறுவங்களுக்கு அளித்த நேர்காணல்கள் வாயிலாக, "பகாசூரன் திரைப்படம் மாணவிகள் மத்தியில் நடைபெறும் ஆபாச தொல்லை & வற்புறுத்தப்பட்ட விபச்சாரம், செல்போன் செயலி, அதுசார்ந்த பிரச்சனைகளை எடுத்து கூறுகிறது.

இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களை பின்னணியில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல மாவட்டங்களில் நடந்த நிகழ்வுகளில், என்னை தொடர்பு கொண்டு பேசிய தந்தையின் நிலையை மையகருத்தாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. கட்டாயம் படம் வெளியான பின்னர் மாபெரும் தாக்கம் ஏற்படும்" என தெரிவித்து இருக்கிறார்.

Bakasuran Visuals from Trailer (Photo Credit: YouTube)

இதனால் பகாசூரன் திரைப்படம் எப்படியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதை பார்க்க ஒருதரப்பு ஆவலுடன் இருக்கிறது. அதே வேளையில் மற்றொரு முனையில் அவர் விமர்சித்த கொள்கை ரீதியான விவகாரத்தில் எழுந்த சர்ச்சை, முந்தைய படங்கள் சந்தித்த விமர்சனம் என அடுத்தடுத்த நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையில் படம் பிப்ரவரி 17 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பும் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், இன்று படத்தின் Sneak Peek காட்சிகள் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் தான் படத்தின் முக்கிய விவகாரங்களில் ஒன்றாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Bakasuran Sneek Peek Here https://youtu.be/T6oRWvljzYk

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 14, 2023 07:12 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now