S.A.ChandraSekar & Rajinikanth: ஓகே சொன்ன ரஜினி.. உற்சாகத்துடன் தயாரான எஸ்.ஏ.சி-க்கு திடீர் பிரச்சனை.. மனம்திறந்து பேசிய எஸ்.ஏ சந்திரசேகர்.!
சந்திரசேகர். அதுவே இவரும் - ரஜினியும் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் ஆகும்.
டிசம்பர், 8: தமிழ் திரையுலகில் 90-களில் முன்னணி தமிழ் இயக்குனராக பணியாற்றி வந்தவர் எஸ்.ஏ சந்திரசேகரர் (S. A. Chandrasekhar). இவர் ரஜினிகாந்தை (Rajinikanth) வைத்து நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தை முதலில் இயக்கியிருந்தார். அதுவே இவரும் - ரஜினியும் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படம் ஆகும். இந்த விஷயம் குறித்து எஸ்.ஏ.சி தனது யார் இந்த எஸ்.ஏ.சி யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "எனது படங்களைத்தான் பெரும்பாலும் பிற மொழிகளில் ரீமேக் செய்து அன்றைய நாட்களில் வெளியிடுவார்கள். ஆனால், முதல் முறையாக ஆச்கி ஆவாஸ் என்ற படத்தினை நான் தமிழில் ரீமேக் செய்து எடுத்தேன். ரஜினியை வைத்து முதன் முதலாக ஹிந்தி படம் எடுத்த கே பிக்சர்ஸ் நிறுவனம் மற்றொரு படத்தை எடுக்க ரஜினியிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தது.
ரஜினிகாந்த் மும்பையில் இருந்தபோது ஆச்கி படத்தை பார்த்து, அவருக்கு அது பிடித்துப்போக கே. பிக்சர்ஸ் நிறுவனத்தாரிடம் அப்படத்தை தமிழில் டப்பிங் செய்ய பேசினார். தமிழுக்கு ஏற்றாற்போல மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறி, படத்தை யார் இயக்கினால் நன்றாக இருக்கும்? என்ற கேள்வி வரும்போது ரஜினிகாந்த் எனது பெயரை கூறியுள்ளார். Honey Benefits: அடேங்கப்பா.. தேனில் இவ்வுளவு நன்மைகளா?.. அசத்தல் நன்மைகளை தரும் தேனின் மகத்துவம் அறிவோம்.!
கே.பிக்சர்ஸ் நிறுவனம் என்னை தொடர்புகொண்டபோது, நான் மும்பையில் படப்பிடிப்பில் இருந்தேன். அவர்கள் என்னிடம் பேசிவிட்டு, ரஜினியும் அங்குதான் இருக்கிறார். நீங்கள் சந்தித்து பேசுங்கள் என்று கூறிவிட்டனர். ரஜினியும் என்னை தொடர்புகொண்டு சந்திக்கலாம் என்று கூறினார்.
நாங்கள் சந்தித்து பேசிவிட்டு, சென்னை சென்றால் பூர்ண சந்திரராவை பாருங்கள் என்று கூறினார். நானும் அவரை சென்று பார்த்தபோது கதை தயாராக இருக்கிறது என்றார். நான் அதனை வாங்கி நமக்கு ஏற்றாற்போல மாற்றம் செய்து 10 நாட்கள் கழித்து படத்தின் தலைப்பாக நான் சிகப்பு மனிதன் என்பதை தெரிவித்தேன்.
படத்தில் ரஜினி ராபின் ஹூட். அவரை கைது செய்ய துடிக்கும் காவல் அதிகாரி சீரியசான நபராக இருப்பார். ஆதலால் இரண்டு கதாநாயகர்கள் வேண்டும் என்ற எண்ணத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பாக்யராஜை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்தோம். ரஜினி இரண்டு நாயகர்களுக்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால், பாக்யராஜ் தினமும் எனது அன்பு கோரிக்கையால் படத்தில் நடித்து கொடுத்தார்" என்று பேசினார்.