Fear In Eyes - CHEVVAIKIZHAMAI: செவ்வாய்கிழமையில் நடந்தது என்ன?.. திகில் காட்சிகளுடன் வெளியானது பியர் இன் ஐஸ் திரைப்படத்தின் மிரட்டல் டீசர்.!
அஜய் பூபதி இயக்கத்தில் தயாராகியுள்ள செவ்வாய்க்கிழமை திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகியுள்ளது.
ஜூலை 04, சென்னை (Cinema News): அஜய் பூபதி இயக்கத்தில், பாயல் ராஜ்புத், நந்திதா ஸ்வேதா, திவ்யா பிள்ளை, அஸ்மல், ரவீந்திர விஜய், கிருஷ்ண சைதன்யா, அஜய் கோஷ், ஷ்ரவன் ரெட்டி, ஸ்ரீதேஜ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் செவ்வாய்க்கிழமை.
இந்த திரைப்படத்திற்கு பி அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு மொழியில் தயாராகியுள்ள திரைப்படம் தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. Car Accident: நடைப்பயிற்சி சென்ற 2 பெண்கள், பச்சிளம் குழந்தை பலி; நெஞ்சை பதறவைக்கும் விபத்து வீடியோ.!
படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு டீசர் வெளியிட்டுள்ளது. டீசரின் படி படம் பேய் கதையம்சம் கொண்ட படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு செவ்வாய்க்கிழமை என்ற கேப்ஷனுடன் பெண் பலாத்காரம் தொடர்பான காட்சிகளும் வந்துசெல்வதால், பலாத்காரத்தால் பலியான பேய் கயவர்களை பழிவாங்கும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கலாம் என தெரியவருகிறது.