March 29 Release Tamil Movies: ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை.. மார்ச் 29 அன்று ரிலீசாகும் தமிழ் படங்கள்... அசத்தல் லிஸ்ட் இதோ..!
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை எப்போதும் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் நடப்பு வாரத்தில் (மார்ச் 29) வெள்ளிக்கிழமை அன்று ரிலீசாகும் படங்களின் விபரம் குறித்த தகவலை அறிய தொடர்ந்து படிக்கவும்.
மார்ச் 28, சென்னை (Cinema News): மக்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்திய திரையுலகை பொறுத்தமட்டில் வெள்ளிக்கிழமை புதுப்படங்களின் ரிலீஸ் என்பது இயல்பானது. வார இறுதியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை திரையிடப்படும் படங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் குடும்பத்தால் பார்த்து கொண்டாடப்படும். ஆனால், இன்றளவில் மக்களுக்கு திரையின் மீதான மோகம் மாறி வருகிறது எனினும், நல்ல படங்கள் வந்தால் அவர்களின் ஆதரவு கிடைக்கிறது. அந்த வகையில், மார்ச் 29 அன்று வெளியாகும் படங்கள் குறித்து காணலாம்.
அழகி (Azhagi): கடந்த 2002ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர்கள் பார்த்தீபன், தேவயானி, நந்திதா தாஸ், விவேக், ஜியார்ஜ் மரியான் உட்பட பலர் நடிக்க, தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அழகி. அன்றைய நாட்களில் மக்களின் பேராதரவை பெற்ற, இன்றளவும் 90 ஹிட்ஸ்களின் நினைவில் ஓடிக்கொண்டு இருக்கும் பாடல்களை கொண்ட திரைப்படம், நாளை மறுவெளியீடு செய்யப்படுகிறது. தமிழ் பிலிம்பேர் சிறந்த படம், பாட்டுச்சொல்லி பாடலுக்காக தேசிய விருதுபெற்ற அழகி திரைப்படம் பலரின் எதார்த்த இளவயது வாழ்க்கையை எதிரொலித்தது. Bombay Talkies Fire Accident: பாம்பே டால்கிஸ் வளாக பகுதியில் பயங்கர தீ விபத்து; போராடி தீயை அணைத்த வீரர்கள்.!
காட்ஸில்லா காங் தி நியூ எம்பயர் (Godzilla X Kong The New Empire): ஆடம் வின்கார்ட் இயக்கத்தில், காட்ஸில்லா மற்றும் கிங் காங் கதையின் தொடர்ச்சியாக, மாறுபட்ட கதையம்சத்தில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் காட்ஸில்லா காங் தி நியூ எம்பயர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரெபேக்கா கால், பிரையன் ஹென்றி, அலெக்ஸ் பெர்னஸ் உட்பட பலரும் நடித்துள்ளனர். டாம் கொள்கன்பெர்க் இசையில், லெஜண்டரி பிக்சர்ஸ் தயாரித்து, வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடும் இப்படம் உலகளவில் பல்லாயிரம் திரையரங்கில், உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகிறது. தமிழிலும் இப்படம் வெளியாகிறது. காங் மற்றும் காட்ஸில்லா ரசிகர்களுக்கு விருந்தாக இப்படம் அமையும். அதிரடி ஆக்சன் காட்சிகள் கொண்ட பிரம்மிப்பூட்டும் காட்சிகளை கண்டு வியக்க இப்படம் தரமானதாக இருக்கும்.
தி பாய்ஸ் (The Boys): இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து ஆகிய படங்களை எடுத்து இன்றைய இளைஞர்கள் மத்தியில் இரட்டை வசன படங்களுக்கு பெயர்பெற்றவராக இருக்கும் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தி பாய்ஸ். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தோஷ் ஜெயக்குமார், ஷாஹ் ரா, கேபிஒய் வினோத், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலரும் நடித்துள்ளனர். இப்படமும் இரட்டை அர்த்த காமெடிகளுடன் உருவாகியுள்ளதால், படம் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Truck Crash With Flight: விமானத்துடன் மோதிய கனரக லாரி; நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு..! விபரம் உள்ளே.!
பூமர் அங்கிள் (Boomer Uncle): அன்கா மீடியா தயாரிப்பில், ஸ்வாதீஷ் இயக்கத்தில், நடிகர்கள் யோகிபாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம்எஸ் பாஸ்கர், தங்கதுரை உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் பூமர் அங்கிள். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 90 கிட்ஸ் ஆன்தம் மியா கலீபா (90's Kid's Anthem Mia Khalifa) என்ற பாடல் வரவேற்பை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹாட்ஸ்பாட் (Hotspot): நடிகர்கள் கலையரசன், சாண்டி, சோபியா, அம்மு அபிராமி, ஜனனி உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் ஹாட்ஸ்பாட். விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், சதிஷ் ரகுநாதன் இசையில் மெருகேற்றப்பட்டுள்ள இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகிறது.
வெப்பம் குளிர் மழை (Veppam Kulir Mazhai): எப்டிஎப்எஸ் ப்ரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு, பாஸ்கல் வேண்டமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வெப்பம் மழை குளிர். நடிகர்கள் திரவ், இஸ்மாத் பானு, எம்எஸ் பாஸ்கர், ரமா மாஸ்டர், கார்த்திகேயன் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள இப்படம் மார்ச் 29 அன்று வெளியாகிறது. படத்தின் இசையமைப்பு பணிகளை ஷங்கர் ரங்கராஜன் மேற்கொண்டு இருக்கிறார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)