iDMB Top Actors India 2023: இந்திய அளவில் சிறந்த நடிகர்கள் டாப் 10 பட்டியலை வெளியிட்டது ஐடிஎம்பி... நயன்தாரா & விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகம்.!
தமிழ் திரையுலகை சேர்ந்த 2 நடிகர்களும், தமிழ் ரசிகர்கள் மீது பேரன்பு வைத்துள்ள நடிகரும் iDMB பட்டியலில் ஒன்று, ஐந்து, பத்து ஆகிய இடங்களை பெற்றுள்ளனர்.

நவம்பர் 22, சென்னை (Cinema News): ஆன்லைனில் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் உட்பட பல்வேறு தரவுகளை IMDB இணையத்தளம், சர்வதேச அளவில் வழங்கி வருகிறது. புதிய படத்தின் அறிவிப்பில் தொடங்கி, பல்வேறு உள்ளடக்கத்தை ரசிகர்களுக்காக IDMB தளம் வழங்கி வருவதால், அது உலகளவிலும் கவனிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை சிறந்த நடிகர்களுக்கான பட்டியல், இந்நிறுவனத்தால் வெளியிடப்படும். அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான இந்திய அளவிலான சிறந்த நடிகர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், இறுதிக்கட்டமாக டாப் 10 நடிகர்கள் குறித்த பட்டியல் இன்று வெளியானது.
இந்த ஆண்டில் ஜவான், பதான் என இரண்டு மெகாஹிட் படங்களை வெளியிட்டு, வசூலில் 2 ஆயிரம் கோடிகளை குவித்த, பாலிவுட் திரையுலகின் கிங் கான் ஷாருக்கான் (Shah Rukh Khan) IDMB தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளார். Fire at Hospital: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; அலறியபடி வெளியேறிய நோயாளிகள்.!
அதனைத்தொடர்ந்து, Our Rani Kii Prem kahaani, Heart of Stone படங்களில் நடித்த நடிகை ஆலியா பட் (Alia Bhatt) இரண்டாவது இடத்தையும், ஜவான் மற்றும் பதான் படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோன் மூன்றாவது இடத்தையும், Kali Jotta, Jubilee, Morden Love Of Chennai ஆகிய படங்களில் நடித்த நடிகை வாமிகா காபி (Wamiqa Gabbi) நான்காவது இடத்தையும் பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என்று புகழப்பட்ட நடிகை நயன்தாரா, ஜவான் மற்றும் இறைவன் படங்களில் நடித்து இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, நடிகை தமன்னா, கரீனா கபூர் கான், சோபிதா துளிபாலா, அக்சய் குமார் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.
இறுதியாக டாப் 10 பட்டியலில், 10வது நபராக தமிழ் திரையுலகின் மக்கள் செல்வன் என்று போற்றப்பட்ட பெருமைக்குரிய நடிகர் விஜய் சேதுபதி இடம்பெற்றுள்ளார். இவர் 2023ம் ஆண்டு நடித்த மைக்கேல், பார்சி, விடுதலை முதல் பாகம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மும்பைக்கர், அழகிய கண்ணே, மாவீரன், ஜவான் ஆகிய படங்களில் நடித்து iDMB பட்டியலில் டாப் 10 இடம்பெற்றுள்ளார்.
iDMB இணையத்தில் சர்வதேச அளவில் தேடப்பட்ட நடிகர்களின் விபரத்தின் அடிப்படையில் iDMB தனது தரவரிசை பட்டியலை வழங்கி இருக்கிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)