Salem Hospital Fire Visuals (Photo Credit: @ANI X)

நவம்பர் 22, சேலம் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இது மாவட்ட தலைமை மருத்துவமனை என்பதால், சேலம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் வந்து தங்கியிருந்து மருத்துவசிகிச்சை பெற்று செல்வது இயல்பு.

இந்நிலையில், இன்று காலை 08:47 மணியளவில் அரசு மருத்துவமனையில் உள்ள முதல்தளத்தில் அமைந்திருக்கும் ஐசியூ மற்றும் ஆர்த்தோ வார்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.

இதனால் அங்கு சிகிச்சை பெறவந்த நோயாளிகள் அவசர கதியில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். உடனடியாக தீயணைப்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். Auto Rickshaw - Lorry Crash: பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச்சென்ற ஆட்டோ - லாரி மோதி பயங்கர விபத்து.. 8 பேர் படுகாயம்.! 

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மருத்துவமனைக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், அதிகாரிகளிடம் நிகழ்வு தொடர்பாக கேட்டறிந்து, உடனடியாக அதனை சரி செய்யவும் ஆணையிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்காலிகமாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.