Youth Kidnapped by Politician: அப்பா வாங்கிய கடனுக்கு மகன் கடத்தல்: அரசியல் கட்சிப்பிரமுகர் அதிர்ச்சி செயல்.. திருச்சியில் பகீர் சம்பவம்.!

மணப்பாறை பகுதியை சேர்ந்த நபர், அரசியல்கட்சி பிரமுகரிடம் வாங்கிய பணத்தை கொடுக்க தவறியதால், அவர் சம்பந்தப்பட்டவரின் மகனை காரில் கடத்திச்சென்ற சம்பவம் நடந்துள்ளது.

Police Investigation | Trichy Railway Station (Photo Credit: Pixabay / YouTube)

டிசம்பர் 12, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, மஞ்சம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஞானப்பிரகாசம். இவர் தொண்டு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். மேலும், அங்குள்ள மணப்பாறை கோவில்பட்டி சாலையில், தனியார் பள்ளி அருகே கடையையும் வைத்து நடத்தி வருகிறார்.

பணம் கொடுக்கல் - வாங்கல் பழக்கம்: இக்கடையை அவரின் மகன் எபனேசர் நடத்தி வந்துள்ளார். ஞானப்பிரகாசம் தனது தொண்டு நிறுவனத்தின் பணிக்காக அவ்வப்போது புதுச்சேரி சென்று வந்துள்ளார். அச்சமயம் சேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில், பணம் கொடுக்கல் - வாங்கல் ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அரசியல்கட்சி பிரமுகரிடம் கடன்: கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னதாக ஞானபிரகாசம் சேகரிடம் ரூபாய் 5 லட்சமாக கடன் பெற்றுள்ளார். சேகர் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய அளவிலான அரசியல் கட்சியின் பிரமுகர் என்று கூறப்படும் நிலையில், அவர் தனது பணத்தை மீண்டும் ஞானப்பிரகாசத்திடம் கேட்டுள்ளார். Husband Kills Wife: பிரிந்து வாழ்ந்த மனைவியை விடுதிக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்து கொன்ற கணவன்: ஆத்திரத்தில் நடந்த பயங்கரம்.! 

பணம் கிடைக்காத விரக்தியில் கடத்தல்: இது இருதரப்பு பிரச்சனையை ஏற்படுத்தவே, பலமுறை கோரிக்கை வைத்தும் பணம் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து மணப்பாறைக்கு வந்த சேகர் மற்றும் அவரது ஆட்கள், மளிகைக்கடையில் இருந்த ஞானபிரகாசத்தின் மகன் எபனேசரை தனது காரில் கடத்திச் சென்றுள்ளார்.

களத்தில் இறங்கிய காவல்துறை: இந்த விஷயம் தொடர்பாக எபனேசரின் சகோதரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, விசாரணையில் இறங்கிய காவல் துறையினர் உடனடியாக கண்காணிப்பு கேமிராக்களை அடுத்தடுத்து ஆய்வு செய்து, கார் திருச்சி நோக்கி பயணித்ததை உறுதி செய்தனர்.

நள்ளிரவில் கைது: சேகரின் செல்போன் எண்ணை வைத்து பின் தொடர்ந்து சென்ற தனிப்படை காவல்துறையினர், நள்ளிரவு நேரத்தில் புதுச்சேரியில் வைத்து சேகரை கைது செய்தனர். அவரின் பிடியில் இருந்த எபனேசரையும் மீட்டு மணப்பாறைக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு சேகரிடம் விசாரணை நடந்து வருகிறது.