IPL Auction 2025 Live

The Kerala Story: தமிழகத்தில் கேரளா ஸ்டோரீஸ் படத்தை திரையிட வேண்டாம் - உளவுத்துறை தமிழக அரசுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.!

ஆகையால், அதனை திரையிட அனுமதிக்க வேண்டாம் என உளவுத்துறை தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

The Kerala Story Poster | Tamilnadu Govt Logo (Photo Credit: Instagram / Wikipedia)

மே 03, சென்னை (Tamilnadu News): சுதிப்தோ சென் இயக்கத்தில், சன் ஷைன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உட்பட பலர் நடித்து மே 05ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் தி கேரளா ஸ்டோரி (The Kerala Story).

இந்த படம் ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.

படத்தின் டிரைலர் காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, கேரளா மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரளாவில் பிற மதத்தை சேர்ந்த பெண்கள், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்ணால் மூளைச்சலவை செய்து மதம் மாற்றப்படுகிறார். Gingee Fort Festival: வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்த செஞ்சிக்கோட்டை கமலக்கன்னியம்மன் கோவில் தேர் திருவிழா..! ஊரே கொண்டாடி மகிழ்ந்தது.!

பின்னர் அவர்கள் ஐ.எஸ் தீவிர கருத்துக்களால் மடைமாற்றப்பட்டு ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவதை போல உள்ள காட்சிகள் இடம்பற்றுள்ளன. இவை முந்தைய காலங்களில் வலதுசாரி அமைப்புகளால் அம்மாநிலத்தில் குற்றச்சாட்டாகவே முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், கேரளா ஸ்டோரீஸ் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிக்க வேண்டாம் என உளவுத்துறை தமிழ்நாடு அரசை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படம் வெளியாகும் அன்று ஏதேனும் சர்ச்சை சம்பவங்கள் நடக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.