Ranbir Kapoor Hurting Religious Sentiments?: கிறிஸ்துமஸ் கேக் மீது மது ஊற்றி மந்திரம் சொன்ன ரன்பீர் கபூர்; மத வழிபாடுகளை அவமதித்ததாக புகார்.!
குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டியபோது, ஜெய் மாதா தி என்ற மந்திரத்தை ரன்பீர் சொன்னதால், அதனை சர்ச்சையாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
டிசம்பர் 28, மும்பை (Cinema News): ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் இந்திய அளவில் பெரிதளவு அறியப்பட்டார். அதேபோல, சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படமும் தற்போது வரை ரூபாய் 700 கோடியை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது.
ரன்பீர் - ஆலியா திருமணம்: இவரும், முன்னணி நடிகையாக வலம் வந்த ஆலியா பட்டும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் பிரம்மஸ்திரா திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றி, காதல் வயப்பட்டு இணைந்தனர். இருவருக்கும் ராகா என்ற மகளும் இருக்கிறார். Preparing Bedroom for Great Night Sleep: படுக்கையறையில் இதை செய்யுங்கள்… நல்ல தூக்கம் வரும்..!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ரன்பீர் கபூர் மற்றும் அவரின் குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பித்தனர். அப்போது, கேக்கின் மீது மதுபானம் ஊற்றி, அதில் தீ பற்றவைத்து 'ஜெய் மாதா தி (Jai Mata Di)' என்று ஹிந்தியில் கூறியவாறு அதனை வெட்டி இருக்கிறார்.
வழக்கறிஞர்கள் புகார்: இதனால் ரன்வீர் கபூர் மத வழிபாடு முறைகளை அவமதித்ததாக கூறி, காத்கோபூர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ஆசிஸ் ராய் மற்றும் பங்கஜ் மிஸ்ரா ஆகியோர் புகார் கொடுத்துள்ளனர். இவர்கள் ரன்வீர் கபூருக்கு எதிராக 28 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.
நடக்கப்போவது என்ன?: இந்த புகார் குறித்து காவல்துறையினர் தற்போது வரை விசாரணையை தொடங்கவில்லை, வழக்குப்பதிவு செய்யவில்லை. இதனால் வழக்கறிஞர்கள் இருவரும் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடி இருக்கின்றனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு பின்னரே மேற்படி நடவடிக்கை எடுக்கிறார்களோ? அல்லது பிரச்சனை முடித்து வைக்கப்படுமா? என்பது தெரியவரும்.