டிசம்பர் 27, சென்னை (Chennai): பொதுவாக ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமாகவும் சந்தோஷமாகவும் இருப்பது என்றால் அது அவனின் படுக்கை அறையில் (Bedroom) தான். அதிகபட்ச கோபமாக இருந்தாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி, அது நம்முடைய தலையணைக்கு மட்டும் தான் தெரியும். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அறையை எவ்வாறு அலங்கரிக்கலாம் என்பதனைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
நல்ல தூக்கம் வர: நாம் படுக்கையறையில் படுத்தவுடன் தூக்கம் வருவதற்கு ஏற்றவாறு அறையை அமைக்க வேண்டும். அதாவது படுக்கை அறையில் மின்சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட நுட்பமான பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அதுவும் குறிப்பாக ஆடியோ ஸ்பீக்கர்கள் கூடவே கூடாது. அதிகப்படியான சத்தம், நமது மன அமைதியை கெடுக்கும். எனவே நிம்மதியான தூக்கத்திற்கு அவைகளை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும் இலவன் பஞ்சால் ஆன தலையணைகள் மற்றும் மெத்தைகளை பயன்படுத்த வேண்டும். அது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கும். Beauty Tips: பெண்களுக்கான டிப்ஸ்... ஈவன் டோன் வழங்கும் ப்யூட்டி பிளண்டர்ஸ்..!
படுக்கை அறைக்கு ஏற்ற நிறம்: படுக்கை அறையில் நீல வண்ணத்தினை பயன்படுத்துவதால் மன அமைதி ஏற்படும் என்று ஆய்வு தகவல்கள் கூறுகின்றனர். அதுவும் குறிப்பாக ஆண்களின் படுக்கை அறைக்கு ஸ்கை ப்ளூ வண்ணம் தான் மிகவும் சிறந்ததாம். இளம் பச்சை நிறமும் மன அமைதிக்கு உகந்தது. அதேநேரம் படுக்கை அறையில் உள்ள மின்சார விளக்குகளுக்கு ஊதா வண்ணத்தை உபயோகிக்கலாம். அது இரவை அழகாக்குவதோடு மட்டுமல்லாமல், நம் மனதையும் அழகாக்கும். நிம்மதியான தூக்கத்திற்கு வழி வகுக்கும்.