Laddu Parithapangal: கோபி-சுதாகரின் லட்டு பரிதாபங்கள் வீடியோவால் சர்ச்சை? டெலிட் செய்யப்பட்ட பதிவு; வைரலாக்கும் நெட்டிசன்கள்.!

திருப்பதி லட்டின் புனிதத்தன்மை இறைச்சி கொழுப்பு கலந்த நெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டதால் கேள்விக்குறியான நிலையில், அதன் புனிதத்தை நிலைநிறுத்த ஆந்திர துணை முதல்வர் விரதம் இருக்கிறார். மறுபுறம், சட்டரீதியான நடவடிக்கைகளும் நெய் விநியோகம் செய்த நிறுவனங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகிறது.

Laddu Pavangal on Parithapangal YouTube Channel (Photo Credit: @PolitalksTamil X / Wikipedia Commons)

செப்டம்பர் 25, சென்னை (Chennai News): தமிழக நெட்டிசன்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற யூடியூப் சேனல் பரிதாபங்கள் (Parithapangal). கோபி மற்றும் சுதாகர் என்ற இரண்டு நண்பர்களால் தொடங்கப்பட்டு, இன்று ஒட்டமொத்த தமிழ்நாட்டின் ட்ரோல் அடையாளமாக இருக்கின்றனர். அவ்வப்போது பரிதாபங்கள் என்ற பெயரில் வெளியாகும் பல்வேறு காணொளிகள் வைரலாகி நல்ல வரவேற்பை பெரும். அரசியல், நடப்பு நிகழ்வுகள் என ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாக கவனித்து, எளிமையான முறையில் ட்ரோல் செய்து வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் திருப்பதி (Tirupati Laddu Row) லட்டில் இறைச்சி கொழுப்பு எண்ணெய் கலந்த நெய் விநியோகம் செய்யப்பட்டது உறுதியானது. இதனால் ஆந்திர மாநில அரசியலிலும் பெரும் விவாதம் உண்டாகி இருக்கும் நிலையில், முந்தைய ஜெகன் மோகன் அரசின் மீது பகிரங்க குற்றசாட்டுகள் வைக்கப்படுகின்றன. லட்டின் புனிதத்தன்மை கேள்விக்குறியானதால், அதனை ஆன்மீக ரீதியாக நிவர்த்திசெய்ய, அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 12 நாட்கள் விரதம் இருக்கிறார். Kodaikanal Land Fissure: திரைப்பட பாணியில் திடீரென விரிசல் விழும் நிலங்கள்; கொடைக்கானலில் பகீர் சம்பவம்.. நடப்பது என்ன?.. எம்.எல்.ஏ., எம்.பி விளக்கம்.!

பரிதாபங்களின் லட்டு (Lattu Prasada) வீடியோ:

இந்நிலையில், நேற்று பரிதாபங்கள் யூடியூப் சேனலில் லட்டு பரிதாபங்கள் (Laddu Parithapangal Pavangal) என்ற பெயரில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், திருப்பதி லட்டில் இறைச்சி கொழுப்பு நெய் கலக்கப்பட்டது தொடர்பான விஷயங்கள் மற்றும் சர்ச்சைக்குள்ளான விவாதங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் லட்டு விவகாரத்தில் பெண் ஒருவர் தெரிவித்த கருதும் பகிரப்பட்டது. இதனால் வீடியோ தங்களின் மனதை புண்படுத்தியதாக எதிர்ப்பு கிளப்ப, பரிதாபங்கள் தரப்பில் அந்த வீடியோ நீக்கப்பட்டு, சிலரின் மனம் புண்பட்டதால் நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது. Kuzhambu Milagai Thool: வீட்டிலேயே சுலபமான முறையில் குழம்பு மிளகாய் தூள் தயார் செய்வது எப்படி..?

சர்ச்சை என்ன?

கோபி மற்றும் சுதாகர் வெளியிட்ட வீடியோவில், அவர்கள் வழக்கம்போல தங்களின் பாணியில் சர்ச்சையான விஷயத்தை கலாய்த்து, பின் இறுதியாக தவறு இழைத்தோரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை போலவே கோரிக்கை வைக்கும் வகையில் காட்சிப்படுத்தி இருந்தனர். திருப்பதி லைட்டை சாப்பிடும்போது, அதனை பற்றிய செய்தியை உணரும் நபரின் நிலையையும் பதிவு செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய பேட்டியையும் மையப்படுத்தி அவர்கள் காட்சிகளை பதிவு செய்திருந்தனர். அந்த சில நிமிட காணொளியை வைத்தே ஒட்டுமொத்த எதிர்ப்பும் கிளம்பியதாக தெரியவருகிறது.

இருப்பினும், இதுகுறித்த வீடியோவை பதிவிறக்கம் செய்த நெட்டிசன்களில் சிலர், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கின்றனர்.

பரிதாபங்கள் குழு வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக்கேட்டு வீடியோவை டெலீட் செய்தது:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement