செப்டம்பர் 24, சென்னை (Kitchen Tips): குழம்பு மிளகாய் தூளை (Curry Chilli Powder) பக்குவமாக எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்தெந்த அளவுகளில் எப்படி அரைப்பது என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கடைகளில் வாங்கும் குழம்பு மிளகாய் தூளை போலவே இந்தப் பொடி வாசமாகவும், சுவையாகவும் இருக்கும். மேலும், 6 மாதம் வரை இந்தப் பொடியை இப்படி அரைத்தால் கெட்டுப் போகாமலும் இருக்கும். Vendakkai Poriyal Recipe: வெண்டைக்காய் பொரியல் சுவையாக செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
தேவையான பொருட்கள்:
மல்லி - 500 கிராம்
வர மிளகாய் - 500 கிராம்
அரிசி - 50 கிராம்
துவரம்பருப்பு - 50 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
பெருஞ்சீரகம் - 50 கிராம்
மஞ்சள் - 25 கிராம்
கடுகு - 25 கிராம்
வெந்தயம் - 25 கிராம்
செய்முறை:
- முதலில் வர மிளகாய், மல்லி மற்றும் மஞ்சளை நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ளவும்.
- மீதமுள்ள எல்லா பொருட்களையும், மிதமான தீயில் ஒவ்வொன்றாக எண்ணெய் சேர்க்காமல் வறுக்க வேண்டும்.
- வறுத்த பொருட்களை ஆற வைத்துக் கொள்ளவும். நன்றாக ஆறிய பின்பு மிக்சியில் அல்லது ரைஸ் மில்லில் கொடுத்து அரைக்கவும்.
- அரைத்த தூள் சூடாக இருக்கும், அதனை மீண்டும் ஆற வைக்க வேண்டும். ஆற வைத்த தூளை ஒரு பெரிய பாட்டிலில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.
- அவ்வளவுதான் கமகமக்கும் குழம்பு மிளகாய்த்தூள் தயார்.