One & Only Superstar: "உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது" -சூப்பர்ஸ்டார் பட்டம் பிரச்சனையில் ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்.!

கடந்த சில நாட்களாகவே சூப்பர்ஸ்டார் யார் என்ற பிரச்சனை மேலோங்கியுள்ள நிலையில், எப்போதும் நாங்க தான் என ரஜினி ரசிகர்கள் வைத்த சுவரொட்டி வைரலாகியுள்ளது.

Rajinikanth Fans Poster Dindigul (Visuals from Spot)

ஜனவரி 20, திண்டுக்கல்: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) இருக்கிறார். அவரது திரையுலக பயணம் தொடங்கிய நாட்கள் முதல், இன்று வரை அவரின் வளர்ச்சி என்பது அசுரத்தனமாகத்தான் இருக்கிறது. இணையங்கள் குறித்த அறிமுகமே இல்லாத காலத்தில் கூட சீனா, ஜப்பான், அமெரிக்கா (China, Japan, America) போன்ற பல நாடுகளில் அவரின் ஸ்டைல் கலந்த நடிப்பு வரவேற்கப்பட்டு ரசிகர் பட்டாளத்தையே ஏற்படுத்தியது.

இன்றளவில் உள்ள தொழில்நுட்ப யுகத்தில் தேவைக்கேற்ப அப்டேட் செய்துகொண்ட பிற நடிகர்களின் ரசிகர்கள், ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் கிடையாது, நாங்கள்தான் வசூலில் சூப்பர்ஸ்டார், லைக் & வியூஸில் சூப்பர்ஸ்டார் என அடித்துக்கொண்டு வருகின்றனர். Ukraine President Jelansky Speech: ரஷிய அதிபர் புதின் இறந்துவிட்டாரா? – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பரபரப்பு பேச்சு.!

இடையில் நடிகர் சரத் குமார் தன்னை சுப்ரீம் ஸ்டார் (Supreme Star Saratkumar) என்று கூறி செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசப்பட்டார். சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு உள்ள விவாதம் இன்று எங்கு ஆரம்பித்தாலும், தமிழ் திரையுலகில் உள்ள பிற நடிகர்களை சூப்பர்ஸ்டார் என வந்தோர் போவோர் எல்லாம் கூறினாலும், அப்பட்டத்திற்கு யார் தகுதியானவர் என்று இன்று போர்க்கொடி தூக்கும் ரசிகர்களின் நட்சத்திரம் அன்றே அதனை கூறிவிட்டனர்.

இதற்கிடையில், திண்டுக்கல் (Dindigul Rajinikanth Fans Poster Viral) மாவட்டத்தில் உள்ள அண்ணாத்த குரூப்ஸ் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், "அன்றும், இன்றும், என்றும் ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர்ஸ்டார். உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது" என வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இது நேரடியாக விஜய் ரசிகர்களை தாக்கி இருப்பதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 20, 2023 10:20 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now