Jr NTR about Oscar: தாயகம் திரும்பிய ஜூனியர் என்.டி.ஆர்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேட்டி.!
இந்தியர்களாக நாம் பெருமைப்படவேண்டிய தருணம் இது என நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பேசினார்.
மார்ச் 15 (Cinema News): அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels, America) நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் (Oscar Awards) வழங்கும் விழாவில், ராஜமௌலியின் (SS Rajamouli) இயக்கத்தில், ராம்சரண் (Ram Charan) மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் (Junior NTR) நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் சிறந்த (Naatu Naatu Song) பாடல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டு வெற்றிவாகை சூடியது. இதனால் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பின்னர் ஆஸ்கர் பெற்ற இந்தியராக சந்திரபோஸ் மற்றும் எம்.எம். கீரவாணி ஆகியோர் புகழ் பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் படக்குழு அமெரிக்காவில் இருந்து ஒவ்வொருவராக இந்தியா திரும்ப தொடங்கியுள்ளது. தற்போது, அப்படத்தின் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவில் வருகை தந்தார். அவருக்கு விமான நிலையத்தில் வைத்தே உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டன.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜூனியர் என்.டி.ஆர் பேசுகையில், "இது எனது சிறந்த தருணம். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. நான் பெருமையாக உணருகிறேன். நான் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்றதை பெரும் மகிழ்ச்சியாக உணருகிறேன். ஆஸ்கர் விருது கிடைத்தது ஒவ்வொரு ரசிகருக்கு கிடைத்த வெற்றி. அனைத்து தரப்பு திரை ரசிகர்களுக்கும் நன்றி.
ரசிகர்களின் அன்பு, ஆதரவு மூலமாகவே ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கு, ரசிகர்க்கும் எனது நன்றி. அவர்களின் ஆதரவால் மட்டுமே ஆஸ்கர் சாத்தியமானது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்" என கூறினார். Living Together Women Killed: லிவிங் டுகெதரில் வாழ்ந்த பெண்ணை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற காதலன்.. ஐ.டி ஊழியர் பகீர் செயல்.!