Critics Choice Awards 2023: சிறந்த வெளிநாட்டு படமாக RRR தேர்வு.. கொண்டாட்டத்தில் ராம்சரண், ராஜமௌலி ரசிகர்கள்.!

2022 மார்ச் மாதம் வெளியாகி இன்று வரை ரூ.1,200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படமாக தேர்வு செய்யபட்டுள்ளது.

RRR Movie Victory @ Critics Choice Awards 2023 (Photo Credit: Critics Choice)

ஜனவரி 16, லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels, California) நகரில் இருக்கும் Fairmont Century Plaza-வில் 28வது விமர்சகர்கள் தேர்வு விருதுகள் (Critics Choice Awards) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உலகளாவிய படங்கள் திரையிடப்பட்டன. விருதுகளை வழங்கும் நிர்வாகம் திரைப்படங்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தன.

கடந்த 2022ல் எஸ்.எஸ். ராஜமௌலி (Director SS Rajamouli) இயக்கத்தில், ராம் சரண் (Ram Charan), என்.டி. ராமோ ராஜு, அஜய் தேவ்கன், ஆலியா பட், ஓலிவா மோரிஸ், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் ரத்தம்-ரணம்-ரௌத்திரம் என்ற ஆர்.ஆர்.ஆர் (RRR Movie). Nepal Flight Crash Vidoe: நேபாளத்தில் பயணிகள் விமான விபத்தில் 72 பேர் பலி..! இறுதிநேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்.!

கடந்த மார்ச் 2022ல் வெளியான RRR திரைப்படம் ரூ.550 கோடி செலவில் எடுக்கப்பட்டு, உலகளவில் அமோக வரவேற்பை பெற்று தற்போது வரை ரூ.1200 கோடி வசூல் செய்துள்ளது. படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்த நிலையில், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் Critics Choice விருதுகளில் சிறந்த வெளிநாட்டு படம் என்ற விருதை தட்டிச்சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழு மற்றும் படத்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Visual Effects பிரிவில் இருந்தும் RRR படம் நாமினேஷனுக்கு சென்ற நிலையில், அங்கு ஜேம்ஸ் கேமரூனின் அவதார் தி வே ஆப் வாட்டர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 16, 2023 08:51 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement