Hema Committee Report: "படுக்கைக்கு வந்தால் படவாய்ப்பு" - மலையாள திரையுலகின் அவல நிலை.. திடுக்கிடவைக்கும் ரிப்போர்ட்..!
கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 20, திருவனந்தபுரம் (Kerala News): கேரளாவில் சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியிலான பிரச்சனைகள் குறித்து விசாரிக்கக் கேரள அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிஷன் (Hema Committee) அமைத்தது. கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை (Rape) செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து மலையாள சினிமாவில் இதுபோல பல சம்பவங்கள் நடப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்த விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.
நடிகை சாரதா மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே பி வத்சலா குமாரி ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் பல்வேறு தரப்பினரிடம் சென்று விசாரித்து இந்த அறிக்கையைச் சமர்ப்பித்தனர். இந்தக் குழு கடந்த 2019 டிசம்பர் 31-ஆம் தேதி தனது அறிக்கையைக் கேரள அரசிடம் சமர்ப்பித்தது. இருப்பினும், சில காரணங்களால் இந்த அறிக்கையை கேரள அரசு வெளியிடப்படவில்லை. இதற்காகக் கேரள அரசு கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. தனிநபர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க சில முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டு 233 பக்க அறிக்கையை மட்டும் நேற்று (ஆகஸ்ட் 19) வெளியிடப்பட்டது. K Armstrong Murder Case: கே. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; இயக்குனர் நெல்சன், நெல்சனின் மனைவியிடம் விசாரணை.!
மலையாள சினிமா துறையில் (Malayalam Cinema) முக்கிய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட உயர் பதவிகளில் உள்ளவர்கள், பெண்களை உல்லாசத்திற்கு அழைத்துள்ளது தெரியவந்துள்ளது. தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பெண்களை தேவையற்ற செயல்களைச் செய்ய நிர்பந்திப்பதால், இதில் பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தப்பட்டு, அதற்கு இணங்கவோ அல்லது துறையை விட்டு வெளியேறவோ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர்கள், இடங்கள் மற்றும் சூழ்நிலைகள் பற்றிய குறிப்பிட்ட விவரங்கள் தெளிவாக இல்லாததால் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.