Romantic Love Movies: காதலில் நம்மை கரையவைத்த டாப் 10 படங்கள் என்னென்ன?.. லிஸ்ட் இதோ..!

தமிழ் மொழியில் வெளியாகி நமது நினைவில் நீங்காத இடம்பெற்ற அருமையான காதல் படங்கள் 10 குறித்து இன்று காணலாம்.

Template: Tamil Romantic Movie List

டிசம்பர், 10: கடந்த 1931ல் முதன் முதலாக தமிழ் மொழியில் (Tamil Language Movie) வெளியான காளிதாஸ் (Kalidas Movie) திரைப்படத்தை தொடர்ந்து இன்று வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நம் மொழியில் வெளியிடப்பட்டுவிட்டன. இந்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகளை, கருத்துக்களை மையப்படுத்தி எடுத்து வெளியிடப்பட்டுள்ளன.

10 ஆயிரம் படங்கள் வெளியாகி இருந்தாலும் 90 & 2000-களில் அது பல உச்சகட்ட மாறுதல்களையும் சந்தித்து நவீனமடைய தொடங்கியது இன்று வரை தன்னை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இந்த படங்களில் நமது நினைவில் நிற்கும் படங்கள் சில மட்டுமே. அந்த வகையில், நமது நினைவில் நீங்காத இடம்பெற்ற அருமையான காதல் படங்கள் 10 குறித்து இன்று காணலாம்.

ரோஜா, Roja (1992): மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அரவிந்த் சுவாமி நடிப்பில் 1992ல் வெளியான காதல் திரைப்படம் ரோஜா. இப்படம் நமது பட்டியலில் 10ம் இடத்தை பெற்றுள்ளது. ரோஜா படத்தின் நினைவுகள் இன்றும் பலருக்கும் வந்து செல்கிறது என்பது தான் உண்மை.

மின்னலே, Minnale (2001): கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஹரிஷ் ஜெயராஜ் இசையில் மாதவன், ரீமா சென், அப்பாஸ், விவேக் உட்பட பலர் நடித்து வெளியாகிய திரைப்படம் மின்னலே. இப்படம் நம்மை கடந்த காலங்களில் காதலில் கட்டிப்போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Minnale

துள்ளாத மனமும் துள்ளும், Thulladha Manamum Thullum (1999): எழில் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் துள்ளாத மனமும் துள்ளும். குட்டியை தேடி அலையும் நாயகியின்  ஏக்கம், காதலை வலியோடு அனுபவிக்கும் நாயகனின் காதலும் நம்மை கறையவைக்கும். Smart Watches Track Health: அட்ராசக்க.. ஹார்ட் பீட்., உடல் நலத்தை கண்காணிக்க அசத்தல் ஸ்மார்ட் வாட்ச்.. சிறப்பம்சங்களை தெரிஞ்சுக்கோங்க.! 

விண்ணைத்தாண்டி வருவாயா, Vinnaithaandi Varuvaayaa (2010): கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில், நடிகர்கள் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியாகி காதல் கொண்டோரின் நெஞ்சை உலுக்கிய காவியம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் பிலிம்பேர், விஜய் அவார்ட்ஸ் போன்றவற்றையும் பெற்றது கூடுதல் சிறப்பு ஆகும்.

Vinnaithaandi Varuvaayaa

சேது, Sethu (1999): பாலாவின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளம்பிய திரைப்படம் சேது. இப்படத்தை இன்று பார்த்தாலும் அதன் காட்சி ஓட்டங்களில் நாமும் கரைந்துபோவோம்.

பம்பாய், Bombay (1995): மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் திருநெல்வேலி சீமையின் வளத்தை பார்த்து வியந்த நமக்கு காதல் என்ற வியப்பை ஊற்றி உருகவைத்த படம் பாம்பே. காதலில் தொடங்கி அன்றைய காலத்தில் நடந்த பிரச்னையோடு படம் முடிக்கப்பட்டு இருந்தாலும், அந்த காதலும் ஏ.ஆர் ரஹ்மானின் இசையும் இன்று வரை பம்பாயை நமக்கு நினைவுபடுத்துகிறது.

Bombay

96 (2018): சி. பிரேம்குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையில் நடிகர்கள் திரிஷா, விஜய் சேதுபதி உட்பட பலரும் நடித்து பழைய பள்ளி தருணங்களை நினைவுபடுத்திய திரைப்படம் 96. இப்படம் வெளியான சமயத்தில் காதலர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, அவர்களின் இனிமை தருணங்களை நினைவுபடுத்தி வெற்றிகண்டது.

மூன்றாம் பிறை, Moondram Pirai (1982): பாலு மகேந்திராவின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் நடிகர்கள் கமல் ஹாசன், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான திரைப்படம் மூன்றாம் பிறை. 80, 90களில் பிறந்தவர்களுக்கு மூன்றாம் பிறை திரைப்படம் காதலில் கறையவைத்த காவியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மௌனராகம், Mouna Ragam (1986): மணி ரத்தினம் இயக்கத்தில் இளையராஜா இசையில் நடிகர்கள் மோகன், ரேவதி உட்பட பலரின் நடிப்பில் வெளியாகி காண்போரை காதலால் உருகி நேசிக்க வைத்து, அதில் உள்ள பல பிரச்சனைகளை எடுத்துரைத்தது இன்றளவும் காதல் ஜோடிகளிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் மௌனராகம்.

Mouna Ragam

அலைபாயுதே, Alai Payuthey (2000): மணி ரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் நடிகர்கள் மாதவன், ஷாலினி, விவேக் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் அலைபாயுதே. இப்படத்தில் உள்ள ஸ்நேகிதனே, காதல் சடுகுடு, யாரோ யாரோடு உட்பட பல பாடல்கள் இன்று வரை ஒவ்வொருவராலும் ரசிக்கப்படும் பாடல்களில் ஒன்றாகும். தனி மனிதனின் காதல் வாழ்க்கையில் அலைபாயுதே திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம் என்பது கணிக்க முடியாதது. ஆதலால் அது முதல் இடத்தை பெறுகிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 09:45 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif