Rekha Nair: நடிகை ரேகா நாயரின் கார் ஏறி-இறங்கியதில், சாலையில் உறங்கியவர் பரிதாப பலி.. ஓட்டுநர் கைது.!

50 வயது மதிக்கத்தக்க நபரை கார் ஏற்றி கொலை செய்த நடிகையின் ஓட்டுநர், விசாரணைக்கு பின் கிடைத்த சிசிடிவி ஆதாரத்தால் கைது செய்யப்பட்டார்.

Actress Rekha Nair (Photo Credit: @CinemaVikatan X)

ஆகஸ்ட் 28, சென்னை (Cinema News): கடந்த 2013ம் ஆண்டு முதல் சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்கள், வெள்ளித்திரை படங்களில் நடித்து கவனம் பெற்றுவரும் நடிகை ரேகா நாயர் (Rekha Nair). இவரின் கார் ஓட்டுநராக பாண்டி (வயது 25) என்பவர் பணியாற்றி வருகிறார். தற்போது நடிகை ரேகா நாயர் சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக விலையுயர்ந்த கார் ஒன்றும் இருக்கிறது. இதனிடையே, சென்னை ஜாபர்கான்பேட்டை, அன்னை சத்யா நகர் பகுதியில் சம்பவத்தன்று பாண்டி நடிகை ரேகா நாயரின் காரை இயக்கி சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த மஞ்சன் என்ற 55 வயது நபர், சாலையில் படுத்து உறங்கி இருக்கிறார். கார் ஓட்டுநர் அதனை கவனிக்காத நிலையில், மஞ்சனின் மார்பில் கார் ஏறி-இறங்கியது. இந்த சம்பவத்தில் மஞ்சனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். Actress Namitha Issue: நடிகை நமீதாவை கோவிலுக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய அதிகாரிகள்.. கோவில் நிர்வாகம் விளக்கம்..!

காவல்துறையினர் தீவிர விசாரணை:

கார் நிற்காமல் சென்றுவிடவே, மஞ்சன் உடனடியாக கே.கே நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் மஞ்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து கிண்டி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வுசெய்தபோது, காரின் பதிவெண் கிடைத்துள்ளது. அதனை வைத்து ஆய்வு செய்தபோது, கார் தொலைக்காட்சி நடிகையான ரேகா நாயருக்கு சொந்தமானது என்பது உறுதியானது. இவர் அடையாறில் வசித்து வந்ததையடுத்து, நேரில் சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி ஓட்டுநர் பாண்டியை கைது செய்தனர். விபத்து நடந்தபோது நடிகை ரேகா நாயர் காரில் இருந்தாரா? என்பது பற்றிய விபரம் இல்லை. விசாரணை நடந்து வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வம்சம், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் உட்பட பல தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ள நடிகை ரேகா நாயர், ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருக்கிறார். சில படங்களிலும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.