ஆகஸ்ட் 27, மதுரை (Madurai News): மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு (Meenakshi Amman Temple) தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் பாதுகாப்பு கருதி, சாமி தரிசனம் செய்யும் வருபவர்களில் இந்து மதத்தினர் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு, அம்மன் சன்னதிகளில் வழிபட அனுமதிக்கப்படுவர்.
நடிகை நமீதா சாமி தரிசனம்:
இதன்படி, நேற்று (ஆகஸ்ட் 26) காலை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நடிகை நமீதா (Actress Namitha) தனது கணவருடன் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த கோவில் அதிகாரி (Temple Officer) ஒருவர், நடிகை நமீதாவை தடுத்து நிறுத்தி, 'நீங்கள் இந்து (Hindu) மதத்தைச் சேர்ந்தவரா... அதற்கான சான்றிதழ் எதுவும் உள்ளதா?' என கேட்டுள்ளார். அதற்கு, நமீதாவும் அவரது கணவரும் நாங்கள் பிறப்பிலேயே இந்து தான் எனவும், நாடு முழுவதிலும் பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, 'நீங்கள் குங்குமம் வைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்யச் செல்லுங்கள்' என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்பின்னர், நமீதா நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு சாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். Tamil Actor Bijili Ramesh Passes Away: குடியால் அழிந்துபோன பிஜிலி ரமேஷின் வாழ்க்கை.. மரணத்திற்கு முன் அவரே கூறிய உண்மை.. கலங்கவைக்கும் சோகம்.!
நமீதா சர்ச்சை பதிவு:
இந்நிலையில், சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த நடிகை நமீதா, கணவருடன் தங்கிய ஓட்டலில் இருந்து, வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மீனாட்சி அம்மன் கோவிலில் என்னை இந்து என்பதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும் என கோவில் அதிகாரி ஒருவர் கேட்டார். அவர் அப்படி கேட்டது அதிருப்தியாக இருந்தது. இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கோவில்களில் நான் சாமி தரிசனம் செய்து வந்துள்ளேன். இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அதிகாரி ஒருவர் இப்படி நடந்து கொண்டது, என்ன மாதிரியான நடைமுறை என்று தெரியவில்லை” என கோவில் நிர்வாகத்துக்கு எதிராக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கோவில் நிர்வாகம் விளக்கம்:
இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்திடம் விசாரிக்கையில், பொதுவாக முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்களிடம் விவரம் கேட்பது வழக்கம். அதன்படி, முகக்கவசம் அணிந்து கோயிலுக்கு வந்த அவரிடம் விவரம் கேட்கப்பட்டது. அதைத் தவிர வேறு காரணம் இல்லை. அவர் நடிகை என்பது முன்னரே எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர்.
நடிகை நமீதா வெளியிட்ட வீடியோ பதிவு: