Comedian Neel Nanda Dies: பிரபல நகைச்சுவை நடிகர் நீல் நந்தா திடீர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி..!
இந்திய வம்சாவளி ஸ்டாண்ட்-அப் காமெடி நடிகர் நீல் நந்தா காலமானார்.
டிசம்பர் 27, அமெரிக்கா (America): இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடி நடிகர் நீல் நந்தா ஆவார். இவருக்கு வயது 32. இவர் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வெஸ்ட்சைட் காமெடி தியேட்டரில் வாராந்திர நிகழ்ச்சியான ‘அன்னெசசரி ஈவில்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்துள்ளார். இந்நிலையில் இவர் திடீரென உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Vijayakanth Hospitalized Again: விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. காரணம் என்ன?.!
ஆனால், நீல் நந்தாவின் மரணத்திற்கான காரணங்கள் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கனடாவின் டொராண்டோவில் உள்ள ஜோக்கர்ஸ் தியேட்டர் மற்றும் காமெடி கிளப்பில் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அப்போது தனது 32வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில் நீல் நந்தா உயிரிழந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்கு அமெரிக்க பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.