டிசம்பர் 27, சென்னை (Chennai): தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார். கடந்த மாதம் கூட மருத்துவமனையில் மூன்று வார காலம் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், டிசம்பர் 12ம் தேதி அன்று வீடு திரும்பினார். அதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Tirumala Tirupati Devasthanams announcement: புத்தாண்டில் திருப்பதிக்கு அனுமதி இல்லை.. திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு..!
தேமுதிக அறிக்கை: அதனைத் தொடர்ந்து தேமுதிக தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகி உள்ளது. அந்த அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— DMDK Party (@dmdkparty2005) December 26, 2023