Junior Mehmood Dies at 67: பழம்பெரும் திரைப்பட இயக்குனர், நடிகர், பாடகர் புற்றுநோயால் காலமானார்: திரையுலகினர் சோகம்.!
இதனிடையே, அவரை இறைவன் ஆட்கொண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 08, மும்பை (Mumbai): பிரபல மராத்தி திரைப்பட இயக்குனர், பாடகர், இந்திய நடிகர் என பன்முகங்களில் கொண்டவர் ஜூனியர் மெக்மூத். இவரின் இயற்பெயர் நயீம் சையத் (Singer Naeem Sayyed). மராட்டிய மொழியில் வெளியான 6 படங்களை தயாரித்து, இயக்கியும் வழங்கியுள்ளார்.
1967ல் தொடங்கிய திரை வாழ்க்கை: மராட்டிய மொழி மட்டுமல்லாது 7 மொழிகளில் வெளியான 265 திரைப்படங்களில் நடித்த மெக்மூத்தின் திரை வாழ்க்கையானது, கடந்த 1967 ஆம் ஆண்டு தொடங்கியது. பின் 2019 வரை எவ்வித பிரச்சனையும் இன்றி தொடர்ந்தது.
புற்றுநோய் உறுதி: அச்சமயம், மெக்மூத்க்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே சிகிச்சை எடுத்து வந்த மெக்மூத், நான்காம் கட்ட தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். School Holiday: தலைநகரில் தொடரும் மீட்புப்பணிகள்: சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
இயற்கையாக பிரிந்த உயிர்: கடந்த சில நாட்களாகவே அவருக்கு உடல்நலம் குன்றவே, நேற்று தனது வீட்டிலேயே இயற்கையாக உயிரிழந்தார். இவரது மறைவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திரையுலகினர் பலரும் சோகமடைந்து, தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இன்று இறுதிச்சடங்கு: 67 வயதில் தனது மறைவை எட்டியுள்ள மெக்மூத்தின் இறுதிச்சடங்கு, இன்று மதியம் 12 மணியளவில் மும்பை சாண்டா குரூஸ் பகுதியில் இருக்கும் மசூதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.