Car-Bike Accident: வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஸ்கூட்டர் மீது மோதி விபத்து; 2 பெண்கள் பலியான சோகம்..!
மத்திய பிரதேசத்தில் பிஎம்டபிள்யூ கார் ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 16, இந்தூர் (Madhya Pradesh News): மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் (Indore) மாவட்டத்தில் தவறான திசையில் வந்த பிஎம்டபிள்யூ (BMW) கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதி (Road Accident) விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று இரவு 11.50 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Pondicherry Minor Girl Rape & Murder Case: புதுச்சேரியை உலுக்கிய 9 வயது சிறுமி கொலை விவகாரம்; குற்றவாளி சிறையில் தற்கொலை..!
அந்த வீடியோவில், இரண்டு பெண்கள் ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த பிஎம்டபிள்யூ கார், வேகத்தைக் குறைக்காமல் அவர்கள் மீது நேருக்கு நேர் மோதியது. இதனால் ஸ்கூட்டருடன் பெண்கள் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டனர். பின்னர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்த விசாரணையில், ஓட்டுநர் கஜேந்திர சிங் (வயது 28) என அடையாளம் காணப்பட்டார். அவர் தனது நண்பருக்கு பிறந்தநாள் கேக்கை வழங்க விரைந்து சென்று தவறான திசையில் காரை ஓட்டியுள்ளார். இதனையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்கூட்டர் மீது பிஎம்டபிள்யூ கார் மோதும் வீடியோ காட்சி: