Three Terrorists Shot Dead: ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Indian Army In Jammu Kashmir (Photo Credit: @eglobalnews23 X)

ஆகஸ்ட் 29, ஜம்மு காஷ்மீர் (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரில் வருகின்ற செப்டம்பர் மாதம் 18, 25 மற்றும் அக்டோபர் 01 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்றிரவு (ஆகஸ்ட் 28) டங்கர், மச்சில் மற்றும் ரஜௌரியின் லத்தி கிராமம் ஆகிய 3 இடங்களில் பயங்கரவாதிகளின் (Terrorists) நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இதன்பேரில், ராணுவ வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். Passport Seva: அடுத்த 5 நாட்களுக்கு பாஸ்போர்ட் முன்பதிவு இணையம் செயல்படாது; பாஸ்போர்ட் சேவா அறிவிப்பு.!

அப்போது, ஹேரி மொஹ்ரா (Kheri Mohra) எனும் பகுதியில் திடீரென ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனே இந்திய ராணுவத்தினரும் (Indian Army) பதிலுக்கு தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டு, அவர்களை சுற்றி வளைத்ததில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது. மேலும், பல பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதால், தேடுதல் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.