Landslide In Kerala: வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு; இதுவரை 43 பேர் உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்..!

கேரளாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Landslide in Kerala (Photo Credit: @shorts_91 X)

ஜூலை 30, வயநாடு (Kerala News): கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை (Heavy Rains In Kerala) பெய்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் உள்ள வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் (Landslide In Wayanad) சிக்கி இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழையால் கேரள மாநிலம் வயநாட்டின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. Mumbai-Howrah Train Accident: மும்பை விரைவு ரயிலில் 14 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து.. 2 பேர் பலி.. 40 பேர் படுகாயம்..!

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மாலா என்ற பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இப்பகுதியில் மலைப்பகுதிக்கு அருகே உள்ள வீடுகள் மீது மண் சரிந்து விழுந்ததில், இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மீட்புப் பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் குழுவினர் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர். அவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையால், மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement