Five-Year-Old Boy Dies: கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

பெங்களூருவில் கேக் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Cake (Photo Credit: Pixabay)

அக்டோபர் 09, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவை (Bengaluru) சேர்ந்த தம்பதி பால்ராஜ்-நாகலட்சுமி. இத்தம்பதிக்கு தீரஜ் (வயது 5) என்ற மகன் இருந்தார். பால்ராஜ் ஸ்விக்கியில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அவர் வழக்கம்போல உணவு டெலிவரியில் (Food Delivery) ஈடுபட்டு வந்தார். அப்போது, வாடிக்கையாளர் ஒருவர், தான் ஆர்டர் செய்த கேக்கை கேன்சல் செய்தார். Army Jawan Killed: ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்.. இராணுவ வீரர் கடத்திக்கொலை; எல்லையில் பதற்றம்.!

இதனையடுத்து, பால்ராஜ் அந்த கேக்கை (Cake) தனது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். பின்னர், அவர் அந்த கேக்கை தனது 5 வயது மகனுக்கு சாப்பிட கொடுத்துள்ளார். அதனை பால்ராஜ் மற்றும் அவரது மனைவி சாப்பிட்டுள்ளனர். கேக் சாப்பிட்ட சற்று நேரத்தில் 3 பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுவன் தீரஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். பால்ராஜ் மற்றும் அவரது மனைவி நாகலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடார்பாக பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.