Auto Kannadiga: ஆட்டோ கன்னடா கற்றுக்கொள்வது எப்படி?.. சிரமமே இல்லாமல் விளக்கமாக டிப்ஸ் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்.!
பிராந்திய அளவிலான மொழிகளால் ஏற்படும் சர்ச்சையை கட்டுப்படுத்த, ஆட்டோ ஓட்டுநர் கன்னடம் - ஆங்கிலம் மொழியில் சில வசனங்களுக்கு விளக்கம் அளித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
அக்டோபர் 21, பெங்களூர் (Karnataka News): சுதந்திர இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், அந்தந்த பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மாநிலத்தில் உள்ள அனைத்து இடங்களில் இருக்கும் மளிகை கடை முதல் வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் வரை முதலில் மாநில மொழியில் கடையின் விளம்பரத்தை அச்சிடுதல், பின் ஆங்கிலம் அல்லது ஹிந்தி ஆகிய மொழிகளை அச்சிடுதல் என அந்தந்த மாநில அரசு விதிகளுக்கு ஏற்ப மொழிகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இதனை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
கன்னட அமைப்புகள் வலியுறுத்தல்:
கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரையில் இந்தியாவின் டிஜிட்டல் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஐடி நிறுவனங்களின் சாம்ராஜ்யமாக கருதப்படும் பெங்களூர் மாநகரம், இந்தியாவில் உள்ள பிற மாநிலத்தவர் மட்டுமல்லாது, வெளிநாடுகளை சார்ந்தவரும் வசிக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. சமீபகாலமாக அங்கு மாநில மொழி தொடர்பான கோரிக்கைகள் அதிகம் எழுந்து, மாநில அமைப்புகள் பலவும் கடை உட்பட பல நிறுவனங்களில் இருந்த ஆங்கில சொற்களை நீக்கி கன்னட சொற்களை பயன்படுத்தி விளம்பரங்கள் அமைக்க வலியுறுத்தி இருந்தது. Dana Cyclone: 100 கிமீ வேகம்.. தீவிர புயலாக வலுப்பெறுகிறது டானா; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
ஆட்டோ ஓட்டுனரின் செயல்:
மாநில அளவிலும் கன்னட மொழிக்கான பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், தற்போது ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் கன்னட மொழியை ஆங்கிலத்துடன் இணைந்து கற்றுக் கொடுக்கும் முயற்சியில் களமிறங்கி தனது வாகனத்தில் அது சார்ந்த விளம்பரத்தையும் வைத்துள்ளார். இது தொடர்பான விளம்பரத்தில் ஆட்டோவுக்கு உள்ளே, ஆட்டோவுக்கு வெளியே என இரண்டு பிரிவுகள் கொடுக்கப்பட்டு, அதில் ஆட்டோ ஓட்டுனரிடம் மிகப் பிரபலமாக பேசப்படும் வசனங்கள் தேர்வு செய்யப்பட்டு, கன்னடா மற்றும் ஆங்கில மொழியில் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆட்டோவில் ஏறி பயணிக்கும் நபர் கன்னடத்தில் பேசவும், அவர் குறைந்த அளவு கன்னடத்தை எளிதில் விரைவாக கற்றுக் கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது, தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆட்டோவுக்கு உள்ளே / வெளியே பேச வேண்டிய கன்னட வசனங்கள் ஆங்கிலத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ள காட்சி உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது: