Bank Employee Dies: பணிச்சுமையால் இருக்கையில் சரிந்து விழுந்த வங்கி ஊழியர்.. துடிதுடித்து பலியான சோகம்..!

லக்னோவில் அதிக வேலை பளு காரணமாக பணிசெய்து கொண்டிருந்த வங்கி ஊழியர் ஒருவர், திடீரென இருக்கையில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Work Pressure (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 25, லக்னோ (Uttar Pradesh News): தனியார் ஐடி நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களில் வேலைப்பளு (Work Pressure) அதிகம் இருப்பதன் காரணமாக ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மன அழுத்தம் (Stress) காரணமாக சிலருக்கு ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருவதாகவும் கூறப்படுகிறது. Teenager Dies After Facial Surgery: முக அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனியார் நிறுவன ஊழியர் பலி..!

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவை (Lucknow) சேர்ந்த பாத்திமா என்ற பெண், இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியில் (Bank Employee) கூடுதல் துணைத் தலைவராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு கடந்த சில நாட்களாக வேலைப்பளு அதிகமாக இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று (செப்டம்பர் 24) அவர் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது திடீரென நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.