செப்டம்பர் 25, மங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், மங்களூரு (Mangaluru) உல்லால் அக்கரகெரே பகுதியை சேர்ந்தவர் முகமது மசின் (வயது 32). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இவரது கன்னத்தில் சிறிய கட்டி இருந்தது. இதை அகற்றுவதற்காக, தனியார் முக அறுவை சிகிச்சை (Facial Surgery) மையத்தில், கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். Forced Abortion: கட்டாய கருக்கலைப்பு.. பரிதாபமாக உயிரிழந்த 24 வயது பெண்..!
இதனையடுத்து, அறுவை சிகிச்சை செய்து, கட்டியை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், நேற்று காலை அறுவை சிகிச்சைக்காக, ஒரு அறைக்கு முகமது மசின் அழைத்துச் செல்லப்பட்டார். சுமார் அரைமணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து விடும் என்று தெரிவித்திருந்த நிலையில், அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே அழைத்து வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், அறுவை சிகிச்சை மைய ஊழியர்களிடம் விசாரித்தபோது, முகமது மசின் உடல்நிலை ஏற்ற, இறக்கமாக இருப்பதாகவும், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர். அதன்படி, அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், முக அறுவை சிகிச்சை மையம் மீது, கத்ரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.